தமிழ்நாடு

tamil nadu

கருப்பையில் சண்டை போட்ட இரட்டை குழந்தைகள்- வைரல் வீடியோ.!

By

Published : Apr 17, 2019, 12:10 PM IST

Updated : Apr 17, 2019, 12:22 PM IST

சீனா: தாயின் கருவறையில் இருந்த இரண்டு குழந்தைகள் சண்டை போட்டுக் கொள்ளும் வீடியோ இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

கருப்பையில் சண்டை போட்ட இரட்டை குழந்தைகள்

சீனாவை சேர்ந்தவர் தாவோ. இவரது மனைவி கடந்த ஆண்டு கருவுற்று இருந்தார். அப்போது அவரது கருவின் வளர்ச்சி குறித்து பரிசோதனை செய்ய அருகில் உள்ள ஸ்கேன் சென்டருக்கு சென்று ஸ்கேன் செய்துள்ளார். அப்போது வயிற்றில் இருந்த இரட்டைக் குழந்தைகள் கருவறையில் ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டுக் கொண்டிருந்ததை மருத்துவர்கள் ஸ்கேனில் பார்த்தனர். உடனே அதன் சுவாரஸ்யம் கருதி அது வீடீயோவாக எடுக்கப்பட்டது. இந்த வீடீயோ இப்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

கருப்பையில் சண்டை போட்ட இரட்டை குழந்தைகள்


அந்த இரட்டை பெண் குழந்தைகள் சண்டையிடும் வீடீயோ இதுரை 25 லட்சம் லைக்ஸ், 80 ஆயிரம் கமெண்ட்களை பெற்றுள்ளது. இந்த குழந்தைகள் சில தினங்களுக்கு முன்பு பிறக்க, அவர்களின் தாய் விரும்பி சாப்பிடும் பழங்களான செர்ரி, ஸ்டிராபெரியின் பெயர்களை அவர்களுக்கு வைத்துள்ளார். இந்த வீடீயோவும் இப்போதும் இணையத்தில் வைரலாகி வருவதால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் தாவோ.

Intro:Body:Conclusion:
Last Updated : Apr 17, 2019, 12:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details