தமிழ்நாடு

tamil nadu

முழுமையான தானியங்கி கார் தற்போதைக்கு சாத்தியமில்லை - டெஸ்லா நிறுவனம்

By

Published : May 8, 2021, 2:52 PM IST

முழுமையான தானியங்கி கார் தற்போதைக்கு சாத்தியமில்லை - டெஸ்லா நிறுவனம்
முழுமையான தானியங்கி கார் தற்போதைக்கு சாத்தியமில்லை - டெஸ்லா நிறுவனம்

நடப்பாண்டுக்குள் முழுமையான தானியங்கி காரை வடிவமைப்பது சாத்தியமில்லை என டெஸ்லா நிறுவன மூத்த பொறியாளர் தெரிவித்துள்ளார்.

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான டெஸ்லா நிறுவனம் தானியங்கி கார்களை வடிவமைக்கும் சோதனையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்கின் கனவுத் திட்டம் இதுவாகும்.

இந்த தானியங்கி காரை 2021ஆம் ஆண்டு இறுதிக்குள் வெற்றிகரமாக வடிவமைத்து காட்டுவோம் என முதலீட்டாளர்களிடம் எலான் மஸ்க் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திட்டத்தின் தற்போதைய நிலைமை குறித்து டெஸ்லா நிறுவனத்தின் முன்னணி பொறியாளர் சீஜெ மூர் பேசியுள்ளார். அதில் இந்த தானியங்கி ஆட்டோ பைலட் திட்டம் இரண்டாவது கட்டத்தில் உள்ளது. தற்போதைய சூழலில் முழுமையான தானியங்கி கார் இயக்கம் என்பது சாத்தியமற்றது எனவும் விளக்கியுள்ளார்.

முழுமையான தானியங்கி கார் தற்போதைக்கு சாத்தியமில்லை - டெஸ்லா நிறுவனம்

செமி ஆட்டோமேட்டிக் கட்டத்திலிருந்து முழுமையான தானியங்கி கட்டத்திற்கு செல்வதற்கு நீண்ட காலம் பிடிக்கும் எனவும், அனைத்து பாதுகாப்புகளும் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே, இந்த ஆட்டோ பைலட் திட்டம் நிறைவுபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details