தமிழ்நாடு

tamil nadu

முடிந்தது 20 ஆண்டுகள் அரண்: வெளியேறிய அமெரிக்கப் படை!

By

Published : Aug 31, 2021, 7:54 AM IST

force

ஆப்கானிஸ்தானிலிருந்து கடந்த 20 ஆண்டுகளாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கப் படைகள் முழுவதுமாக வெளியேறிவிட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்: கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் ராணுவத்தினருக்குப் பக்கபலமாகப் பாதுகாப்புப் பணியில் அமெரிக்காவின் நேட்டோ படைகள் இருந்துவந்தன. அமெரிக்கப் படைகள் என்ட்ரியால் பயங்கரவாதிகள் அமைப்புகளின் ஆதிக்கம் அடியோடு குறைந்தது. மக்களுக்கும் தாலிபான்களின் ஷரியா இஸ்லாமிய சட்டத்திலிருந்து விடிவு காலம் பிறந்தது.

இந்நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்ற ஜோ பைடன், ஆப்கானிஸ்தானிலிருந்து ஆக்ஸ்ட் 31ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுமையாக விலகிக் கொள்ளப்படும் என அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, அமெரிக்கப் படைகள் கொஞ்சம் கொஞ்சமாக தாயகம் திரும்ப ஆரம்பித்தது.

மீண்டும் தாலிபான்களின் ஆதிக்கம்

அமெரிக்கப் படைகளின் ஆதிக்கம் இனி இருக்காது என்பதை உணர்ந்துகொண்ட தாலிபான் அமைப்பினர், மீண்டும் ஆப்கானிஸ்தானில் தனது பலத்தை நிரூபிக்க முடிவுசெய்தனர். பல மாகாணங்களைக் கைப்பற்றிய அவர்கள், இறுதியாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.

ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய தாலிபான்

இதன் காரணாக, அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறினார். தாலிபான்கள் ஆப்கனைக் கைப்பற்றியுள்ளதால், சொந்த நாட்டு மக்கள் உள்பட பலர் அந்நாட்டைவிட்டு வெளியேற முடிவுசெய்து விமான நிலையத்தில் குவிந்தனர். காபூல் விமான நிலையம் மட்டும் அமெரிக்கப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்ததால், பல்வேறு நாடுகளும் தங்கள் நாட்டு மக்களை விமானம் மூலம் மீட்டுவந்தன.

முழுமையாகப் படை விலகல்

அமெரிக்காவும் லட்சக்கணக்கான அமெரிக்கர்களை அங்கிருந்து பாதுகாப்பாக மீட்டு வந்துள்ளது. அதிபர் அறிவித்த ராணுவப் படைகள் விலகும் கெடு முடிவுக்கு வந்ததையடுத்து, அமெரிக்காவின் பாதுகாப்புப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக நேற்று வெளியேறியுள்ளன.

வெளியேறிய அமெரிக்கப் படை

கடைசி அமெரிக்க வீரர்

இது குறித்து அமெரிக்க ஜெனரல் கென்னத் எஃப். மெக்கன்சி (US General Kenneth F. McKenzie), "ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதையும், அமெரிக்க குடிமக்களை வெளியேற்றுவதில் ஈடுபட்டிருந்த ராணுவத்தின் பணி முடிவடைந்தது. கடைசி சி -17 விமானம் நேற்று (ஆகஸ்ட் 30) மதியம் பிற்பகல் 3:29 மணிக்கு ஹமீத் கர்சாய் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.

கென்னத் எஃப். மெக்கன்சி

ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்பும் அமெரிக்கர்கள் அல்லது நட்புறவு நாட்டின் குடிமக்களைப் பாதுகாப்பாக மீட்டுவருவதற்கான வழிவகைகளைச் செய்திட நட்புறவு நாடுகளுடன் தொடர்ந்து ஒருங்கிணைப்புக்குத் தலைமை தாங்குமாறு வெளியுறவுத் துறைச் செயலரிடம் கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து விடைபெறும் அமெரிக்கப் படையின் கடைசிவீரர்

இது குறித்து பேசிய ஜோ பைடன், "கடந்த 17 நாள்களில் ஆப்கானிஸ்தானிலிருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் அமெரிக்கர்கள் உள்பட நட்பு நாடுகளின் குடிமக்களை வெளியேற்றி, அமெரிக்க வரலாற்றில் புதிய சாதனையை எங்கள் வீரர்கள் படைத்துள்ளனர். இதைத் துணிவுடனும், உறுதியுடன் செய்து முடித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக இருந்த அமெரிக்க ராணுவப் படையின் காலம் நிறைவுபெற்றது.

ஜோ பைடன்

விமான நிலையம் மீண்டும் திறக்கப்படலாம்

தாலிபான்கள் பாதுகாப்பான பாதையில் உறுதிமொழிகளைச் செய்துள்ளனர். மேலும் உலக நாடுகளின் கூட்டறிக்கை அவர்களைக் கட்டுப்படுத்தும். ஆப்கானிஸ்தானில் நடந்துவரும் ராஜதந்திரம் இதில் அடங்கும். ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்புவோருக்காக விமான நிலையத்தை மீண்டும் திறக்க தாலிபான்களுடன் ஒருங்கிணைந்துச் செயல்படுவோம்" எனத் தெரிவித்தார்.

2001இல் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்களைத் தகர்த்த அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தை அழித்திட ஆப்கானிஸ்தானில் நுழைந்த அமெரிக்க ராணுவப் படையின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

இதையும் படிங்க:'இந்தியா உடனான அரசியல், வர்த்தகம் மிக முக்கியமானது' - ஆப்கன் தலைமை

ABOUT THE AUTHOR

...view details