தமிழ்நாடு

tamil nadu

ட்ரம்ப், ஜோ பிடன் பரப்புரைகளை குறிவைக்கும் சீன,, ஈரானிய ஹேக்கர்கள்!

By

Published : Jun 6, 2020, 12:30 AM IST

நியூயார்க்: டொனால்ட் ட்ரம்ப் , ஜோ பிடன் பரப்புரைகளை சீன, ஈரானிய ஹேக்கர்கள் குறிவைப்பதாக கூகுள் எச்சரித்துள்ளது.

கூகுள்
கூகுள்

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், டொனால்ட் ட்ரம்ப், ஜோ பிடன் பரப்புரைகளை குறிவைத்து சீன, ஈரானிய ஹேக்கர்கள் செயல்பட்டு வருவதாகவும், அதனால் எச்சரிக்கையுடன் செயல்படுமாறும் கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.

சீனா, ஈரான் அரசு நிறுவனங்களின் ஆதரவுடன் ஹேக்கர்கள், ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி ஆகிய இரு கட்சிகளின் பரப்புரை ஊழியர்களுக்கு மின்னஞ்சல்களை அனுப்பித் தகவல்களை திருட முயற்சிப்பதாகவும் கூகுள் எச்சரித்துள்ளது.

இது குறித்து, கூகுளின் அச்சுறுத்தல் ஆய்வுக் குழு (Google's Threat Analysis Group) தலைவர் ஷேன் ஹன்ட்லி நேற்று (04-06-2020) தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த 2016ஆம் ஆண்டில், ரஷ்யாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் அப்போதைய அமெரிக்க தேர்தலில் இதேபோன்ற முயற்சிகளை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஜோ பிடனின் பரப்புரை செய்தித் தொடர்பாளர், "எங்கள் பரப்புரையின் தொடக்கத்திலிருந்தே இத்தகையத் தாக்குதல்களுக்கு ஆளோவோம் என்பதை நாங்கள் அறிந்தே இருக்கிறோம். தற்சமயம் இந்த அச்சுறுத்தல்களுக்கெல்லாம் எதிராக நாங்கள் விழிப்புடன் செயல்பட்டு வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

கூகுளின் இந்த அறிவிப்பு தொடர்பாக ட்ரம்ப் பரப்புரையாளர்கள் தரப்பு இன்னும் எந்த பதிலும் அளிக்கவில்லை.

இதையும் படிங்க :ஜார்ஜ் ஃப்ளாய்டின் இறுதி நொடிகளை நடித்துக்காட்டி போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details