ETV Bharat / international

ஜார்ஜ் ஃப்ளாய்டின் இறுதி நொடிகளை நடித்துக்காட்டி போராட்டம்!

author img

By

Published : Jun 5, 2020, 1:13 PM IST

வாஷிங்டன்: ஜார்ஜ் ப்ளாய்ட் கொல்லப்பட்டைக் கண்டித்து சியாட்டிலில் நடைபெற்ற போராட்டத்தில், அவரை காவலர்கள் கிடத்தியிருந்ததைப் போல சாலைகளில் படுத்து போராட்டக்காரர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Protesters in Seattle
Protesters in Seattle

அமெரிக்காவில் உள்ள மினியாபோலிஸ் நகரில், காவலர் ஒருவரின் பிடியில் சிக்கி ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற ஆப்ரிக்க அமெரிக்கர் உயிரிழந்த சம்பவம் உலகை உலுக்கிவருகிறது. அமெரிக்காவில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு எதிராக தொடர்ந்து நடைபெற்றுவரும் ஒடுக்குமுறையை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

அதன்படி சியாட்டில் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். ஜார்ஜ் ஃப்ளாய்டை காவலர் Choke hold எனப்படும் கோரப்பிடியில் எவ்வாறு சாலையில் கிடத்தியிருந்தாரோ, அதேபோல சாலையில் படுத்துக்கொண்டு போராட்டம் நடத்தினர். மேலும், “Black Lives Matter” உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.

பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டத்தை நடத்த ஏதுவாக சியாட்டிலில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு திரும்பப்பெறப்படுவதாக அந்நகரின் மேயர் ஜென்னி டர்கன் தெரிவித்துள்ளார். சியாட்டில் நகரில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த வரும் சனிக்கிழமை வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மேயர் ஜென்னி டர்கன் கூறுகையில், "பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே நேரம், ஊரடங்கு இல்லாமல் அமைதியான முறையில் மக்கள் போராடுவதை அனுமதிக்க முடியும் என்றே நாங்கள் கருதுகிறோம். தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த போராட்டக்காரர்களுக்கு முழு உரிமை உள்ளது" என்றார்.

இதையும் படிங்க: ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்: மேலும் 3 காவலர்கள் மீது வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.