தமிழ்நாடு

tamil nadu

இந்தியச் சிறுமியைப் பாராட்டிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

By

Published : May 19, 2020, 7:39 PM IST

வாஷிங்டன்: அமெரிக்காவில் சமூக சேவையில் ஈடுபடும் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த சிறுமியை அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேரில் சந்தித்து பாராட்டினர்.

்ே்
dே

அமெரிக்காவில் கரோனா வைரஸ் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழக்கின்றனர். கரோனா பாதிப்புக்குளான மக்களுக்கு மருத்துவமனையில் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுவருகின்றது.

கரோனாவுக்கான போரில் களப் பணியாளர்களான மருத்துவர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள், செவிலியர்கள், தீயணைப்பு வீரர்கள் ஆகியோருக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஸ்ராவ்யா அன்னப்பரெட்டி உள்ளிட்ட 3 சிறுமிகள், பிஸ்கட்கள் வழங்கி ஊக்குவித்தனர்.

இந்தியச் சிறுமியைப் பாராட்டிய அமெரிக்க அதிபர்

இவர்களின் செயலை பாராட்டி பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அவரது மனைவி மெலானியா ட்ரம்ப் ஆகியோர் சிறுமி ஸ்ராவ்யாவை நேரில் அழைத்துப் பாராட்டினர். பரிசுகளை வழங்கியும் உற்சாகப்படுத்தினர். இவருடன் சேவையாற்றிய 2 சிறுமிகளும் நேரில் அழைத்து பாராட்டப்பட்டனர்.

சிறுமி ஸ்ராவ்யா, ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர். ஸ்ராவ்யாவின் பெற்றோர் வேலைக்காக அமெரிக்காவில் குடியேறினர். இருவரும் மருத்துவத் துறையில் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இடம் இல்லை... பிரதமரை வெளியேற்றிய உணவகம்

ABOUT THE AUTHOR

...view details