தமிழ்நாடு

tamil nadu

’மாவீரன்’னாக நடிக்கும் சிவகார்த்திகேயன்!!

By

Published : Jul 15, 2022, 1:50 PM IST

சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கும் படத்திற்கு ’மாவீரன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது

’மாவீரன்’னாக நடிக்கும் சிவகார்த்திகேயன்!!
’மாவீரன்’னாக நடிக்கும் சிவகார்த்திகேயன்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான டான் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை குவித்தது. இவர் தற்போது பிரின்ஸ், அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு ’மாவீரன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. படக்குழு பிரத்யேக சண்டைக்காட்சி வீடியோ மூலம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிரபஞ்ச அழகியுடன் டேட்டிங்கில் இருக்கும் லலித் மோடி...

ABOUT THE AUTHOR

...view details