ETV Bharat / entertainment

பிரபஞ்ச அழகியுடன் டேட்டிங்கில் இருக்கும் லலித் மோடி...

author img

By

Published : Jul 15, 2022, 7:57 AM IST

Updated : Jul 15, 2022, 9:03 AM IST

ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி, பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென்னுடன் டேட்டிங் செய்து வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

முன்னாள் உலக அழகியுடன் டேட்டிங் செய்து வரும் லலித் மோடி!!
முன்னாள் உலக அழகியுடன் டேட்டிங் செய்து வரும் லலித் மோடி!!

ஐபிஎல் முன்னாள் தலைவரும், பிரபல தொழிலதிபருமான லலித் மோடி, பிரபஞ்ச அழகியும், பாலிவுட் நடிகையுமான சுஷ்மிதா சென்னுடன் நெருக்கமாக உள்ள புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும், புதிய வாழ்க்கை தொடங்கியுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

மேலும் அவரது ட்விட்டர் பக்கத்தில், "நாங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், அதுவும் ஒருநாள் நடக்கும்" என லலித்மோடி குறிப்பிட்டுள்ளார். லலித் மோடி மீது போடப்பட்ட ஐபிஎல் பண மோசடி வழக்கில் அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் லண்டனில் தலைமறைவாக உள்ளார். 2018இல் லலித் மோடியின் மனைவி மினால் புற்றுநோயால் உயிரிழந்தார் என்பது நினைவுக்கூரத்தக்கது.

சுஷ்மிதா சென், தனது 18 வயதில் பிரபஞ்ச அழகி பட்டம் பெற்று பாலிவுட்டில் பல்வேறு படங்களில் நடித்தார். தமிழில், 1997ஆம் ஆண்டு பிரவீன் காந்தி இயக்கிய 'ரட்சகன்' திரைப்படத்தில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும், ஷங்கர் - அர்ஜுன் கூட்டணியில் வெளியான 'முதல்வன்' படத்தில், "ஷகலக பேபி"-யாக சுஷ்மிதா சென் தமிழ் திரைப்பட ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார்.

இவர், சில மாதங்களுக்கு முன்னர், தனது காதலர் ரோஹ்மன் ஷால் உடனான உறவை முறித்து கொண்டதாக அறிவித்த நிலையில், தற்போது லலித் மோடியுடன் டேட்டிங் செய்து வருவதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஆகஸ்ட்டில் தொடங்கும் ரஜினியின் ஜெயிலர் படப்பிடிப்பு?

Last Updated : Jul 15, 2022, 9:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.