தமிழ்நாடு

tamil nadu

தனுஷ் பிறந்தநாளன்று வெளியாகும் திருச்சிற்றம்பலம் பாடல்கள்

By

Published : Jul 5, 2022, 1:19 PM IST

தனுஷ் பிறந்தநாளன்று வெளியாகும் திருச்சிற்றம்பலம் பாடல்கள்!

தனுஷ்-அனிருத் கூட்டணியில் வெளியாகவிருக்கும் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் பாடல்கள் இம்மாதம் 28ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது

சென்னை: நடிகர் தனுஷை வைத்து 'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' ஆகிய படங்களை இயக்கியவர் மித்ரன் ஜவஹர். இவர் தற்போது நான்காவது முறையாக தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இதில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், இயக்குநர் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தினை ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் வெளியிடவுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஏழு ஆண்டுகளுக்கு பிறகு தனுஷும் அனிருத்தும் இப்படத்தில் இணைந்துள்ளனர். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் தாய்க்கிழவி பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷின் பிறந்தநாளையொட்டி இம்மாதம் 28ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் இசை வெளியீட்டு விழா நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தனுஷ் நடிப்பில் உருவாகும் “கேப்டன் மில்லர்” டைட்டில் வீடியோ சாதனை

ABOUT THE AUTHOR

...view details