தனுஷ் நடிப்பில் உருவாகும் “கேப்டன் மில்லர்” டைட்டில் வீடியோ சாதனை

author img

By

Published : Jul 4, 2022, 5:30 PM IST

தனுஷ் நடிப்பில் உருவாகும் “கேப்டன் மில்லர்”  டைட்டில் வீடியோ சாதனை

நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்பட அறிவிப்பு வீடியோ, எட்டு திக்கும், மக்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது.

சத்ய ஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்கும், செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் உருவாகும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாகவே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் வெளியான இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோ, இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச தளங்களிலும், அற்புதமான தாக்கத்தை உருவாக்கியுள்ளது. இந்த அறிவிப்பு வீடியோவானது இணையதளங்களில் வெறும் 24 மணி நேரத்தில் 5.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்ற, கோலிவுட்டின் முதல் அறிவிப்பு வீடியோவாக ‘கேப்டன் மில்லர்’ புதிய சாதனையைப் படைத்துள்ளது.

‘கேப்டன் மில்லர்’ படம் மொழி எல்லைகளை கடந்து, அனைத்து திரை ரசிகர்களிடமும் ஒரு அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கரண் ஜோஹர், தனது ட்விட்டர் பக்கத்தில், 'இப்படம் காவியமாக இருக்கப்போகிறது' என அறிவிப்பு வீடியோவினை பாராட்டி பதிவிட்டுள்ளார்.

இது தவிர, நாடு முழுவதும் உள்ள பல முன்னணி திரைப்பட இயக்குநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் நடிகர்கள் இந்த அறிவிப்பு வீடியோவினை பகிர்ந்து பாராட்டி வருகின்றனர். நாடு முழுவதும் இந்த வீடியோ பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் தனுஷ் ட்வீட் செய்த அறிவிப்பு வீடியோ ட்விட்டரில் 2 மில்லியன் பார்வைகளையும், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1 மில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற பிரமாண்டமான வரவேற்பும், எல்லா இடங்களிலிருந்தும் மனதைத் தொடும் பாராட்டுக்களும், 'கேப்டன் மில்லர்' படத்தினை இப்போதே அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்திய திரைப்படமாக மாற்றியுள்ளது.

இதையும் படிங்க: “தமிழ் ராக்கர்ஸ்” டீசர் வெளியானது !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.