தமிழ்நாடு

tamil nadu

'NO GUTS NO GLORY' வெளியானது துணிவு படத்தின் செகண்ட் லுக்!

By

Published : Sep 22, 2022, 1:06 PM IST

'NO GUTS NO GLORY' வெளியானது துணிவு படத்தின் செகண்ட் லுக்!

ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்து வரும் 'துணிவு' படத்தின் செகண்ட் லுக் வெளியாகியுள்ளது.

ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்து வரும் 'துணிவு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானதை தொடர்ந்து தற்போது படத்தின் செகண்ட் லுக் வெளியாகியுள்ளது.

ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர். 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை' படத்திற்கு பிறகு அஜித் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது திரைப்படம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

’வலிமை’ படத்திற்கு பிறகு வெகு நாட்களாக எந்த ஒரு அப்டேட்டும் இல்லாமல் இருந்த நிலையில் அடுத்தடுத்து இரண்டு போஸ்டர்கள் வெளியாகியுள்ளதால், இதனை சமூக வலதளங்களில் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க:இந்தியன் 2 படப்பிடிப்பில் கமல்ஹாசன் பங்கேற்பு!

ABOUT THE AUTHOR

...view details