தமிழ்நாடு

tamil nadu

'பொன்னியின் செல்வன்' பிரமாண்ட இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தரயிருக்கும் ரஜினி - கமல்

By

Published : Sep 5, 2022, 5:50 PM IST

நாளை நடைபெறவுள்ள பொன்னியின் செல்வன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கலந்துகொள்ளவுள்ளனர்.

ரஜினி - கமல் வருகை தரும் பொன்னியின் செல்வன் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா..!
ரஜினி - கமல் வருகை தரும் பொன்னியின் செல்வன் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா..!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், லைகா புரொடக்ஷென்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் “பொன்னியின் செல்வன் பாகம்-1" திரைப்படம் செப்.30ஆம் தேதி அன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை(செப்.6) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெறுகிறது.

இந்தியத் திரையுலகின் இரு பெரும் தூண்களான கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரின் முன்னிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் ''பொன்னியின் செல்வன் பாகம் -1" திரைப்படத்தின் பாடல்களை தனது இசைக்குழுவோடு சேர்ந்து அரங்கேற்றுகிறார்.

இசை நிகழ்ச்சியோடு இணைந்து திரையுலகின் மூத்த கலைஞர்களும், தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், விநியோகஸ்தர்களும், படத்தின் நட்சத்திரங்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் கலந்து கொள்கின்றனர்.

இதையும் படிங்க: சுந்தர்.சி படத்தை வெளியிடும் உதயநிதி ஸ்டாலின்!


ABOUT THE AUTHOR

...view details