ETV Bharat / entertainment

சுந்தர்.சி படத்தை வெளியிடும் உதயநிதி ஸ்டாலின்!

author img

By

Published : Sep 5, 2022, 4:15 PM IST

சுந்தர்.சி படத்தை வெளியிடும் உதயநிதி ஸ்டாலின்!
சுந்தர்.சி படத்தை வெளியிடும் உதயநிதி ஸ்டாலின்!

இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காஃபி வித் காதல்’ திரைப்படத்தை ரெட் ஜெயண்ட்ஸ் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வெளியிடவுள்ளார்.

அரண்மனை-3 படத்திற்குப்பிறகு சுந்தர்.சி இயக்கியுள்ள படம் 'காஃபி வித் காதல்'. குஷ்பூவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடேட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் என மூன்று கதாநாயகர்கள் நடிக்க, மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

மேலும், முக்கியக் கதாபாத்திரங்களில் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கலகலப்பான படங்களை இயக்குவதற்கு பெயர்பெற்ற இயக்குநர் சுந்தர்.சி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

கலகலப்பான காதல் கதையாக உருவாகி உள்ளது ’காஃபி வித் காதல்’. இப்படத்தில் இருந்து ’ரம்பம்பம் ஆரம்பம்’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின்‌ வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் அக்டோபர் 7ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இதையும் படிங்க: ’உங்கள் படைப்புகளிலேயே இதுதான் சிறந்தது..!’ - ‘நட்சத்திரம் நகர்கிறது’ குறித்து ரஜினிகாந்த்




ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.