தமிழ்நாடு

tamil nadu

'திருநங்கைகளுக்கு தனி நல வாரியம் அமைக்கப்படும்' - அமைச்சர் கீதாஜீவன் உறுதி

By

Published : Jun 3, 2021, 8:52 PM IST

தூத்துக்குடி: திருநங்கைகளுக்கென தனி நல வாரியம் அமைக்கப்படும் என தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பி.கீதாஜீவன் பேட்டியளித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு புத்தாக்கத் திட்டம்
தமிழ்நாடு அரசு புத்தாக்கத் திட்டம்

தூத்துக்குடியில் ஊரக புத்தாக்க வாழ்வாதார திட்டத்தின்கீழ் திருநங்கைகளுக்கு நபார்டு மூலம் கரோனா நிவாரண உதவிகளை இன்று (ஜூன்.03) அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளிக்கையில், "திருநங்கையர்கள் சமுதாயத்தில் அங்கீகரிக்கப்படவேண்டும் என்பதற்காக அரசு அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. பல இடங்களில் திருநங்கையர்கள் நடனம், நாட்டுப்புறக் கலைகளின் மூலம் தங்களின் வாழ்க்கையை மேம்படுத்தி வருகிறார்கள்.

தொடர்ந்து கல்வி, வேலைவாய்ப்பில் அவர்கள் உரிய சலுகைகளைப் பெற்று வாழ்க்கையில் மேம்பட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகநலத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க கூறியுள்ளார். அதன்படி தமிழ்நாட்டில் அடையாள அட்டை பெற்ற திருநங்கையர்கள் 11 ஆயிரம் பேர் உள்ளனர்.

அவர்கள் சமுதாயத்தில் மேம்பாடு அடைவதற்காக திருநங்கைகளுக்கான தனி நல வாரியம் விரைவில் அமைக்கப்படும். அதன் தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்" என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் செந்தில்ராஜ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details