தமிழ்நாடு

tamil nadu

சட்டவிரோதமாக இடிக்கப்பட்ட வீடு: ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி நீதிமன்றம் உத்தரவு

By

Published : Aug 6, 2021, 4:39 PM IST

நத்தம் புறம்போக்கு பகுதியில் குடியிருந்தவரின் வீட்டை சட்டவிரோதமாக இடித்ததற்கு இழப்பீடாக 10 லட்ச ரூபாய் கோரிய வழக்கில், தொடர்புடைய ஆவணங்களை மனுதாரர் தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற செய்திகள்
நீதிமன்ற செய்திகள்

மதுரை: சிறுவாலையைச் சேர்ந்த பாண்டியம்மாள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "சிறுவாலை பகுதியில் உள்ள நத்தம் புறம்போக்கு பகுதியில் வீடு கட்டி பல ஆண்டுகளாக வசித்து வரும் நான், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக முறையாக வீட்டு வரியை செலுத்தி வருகிறேன்.

இந்நிலையில் கடந்த பஞ்சாயத்து தேர்தலின்போது என் மீது விரோதம் கொண்ட சிலரின் தூண்டுதலின் பேரில், ஜூலை 9ஆம் தேதி மாலை மூன்று மணியளவில், வருவாய் ஆய்வாளர் அய்யம்மாள், ஊராட்சிமன்றத் தலைவர் பாண்டியம்மாள், கிராம நிர்வாக அலுவலர் முனுசாமி உள்ளிட்டோருடன் சிலர் வந்து என்னை வலுக்கட்டாயமாக வீட்டை விட்டு வெளியேற்றினர்.

மேலும், எனது உடைமைகளை வீட்டின் வெளியே எறிந்ததுடன், பொக்லைன் இயந்திரம் மூலம் எனது வீட்டையும் இடித்து விட்டனர். நத்தம் புறம்போக்கு பகுதியில் குடியிருந்தாலும், சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக முறையாக வரி செலுத்தி வருவதுடன், மின் வாரியத்திடம் இருந்து மின்சார இணைப்பையும் பெற்றுள்ளேன்.

பழமையான குட்டையை ஆக்கிரமிக்கும் ரியல் எஸ்டேட் அதிபர்கள் - மீட்கும் முயற்சியில் அப்பகுதி மக்கள்!

இந்நிலையில் இதுபோல நடந்துகொண்டது ஏற்கத்தக்கது அல்ல. இது தொடர்பாக அலுவலர்களிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே சட்டவிரோதமாக எனது வீட்டை இடித்து அப்புறப்படுத்திய அலுவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவும், இடிக்கப்பட்ட எனது வீட்டை மீண்டும் கட்டிக்கொடுக்கவும் உத்தரவிட வேண்டும். மேலும் எனக்கு பத்து லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரரிடம், மனு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details