கோயம்புத்தூர்:சூலூர் அருகேவுள்ள அரசூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி திலகவதி. சுப்பிரமணி வட்டிக்கு பனம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி இரவு சுப்பிரமணி, தென்னம்பாளையம் அன்னூர் சாலையிலுள்ள உணவகத்தில் உணவு வாங்க சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர் திடீரென சுப்பிரமணியைத் தாக்கி கத்தியால் குத்தி, அரிவாளால் வெட்டினர்.
இதில் படுகாயமடைந்த அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சூலூர் காவல் துறையினர், விசாரணை நடத்தினர். முதலில் பணம் வட்டிக்கு கொடுப்பதில் பிரச்சினை ஏற்பட்டு யாராவது இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அம்பலமான உன்மை
ஆனால் அதற்கான சாத்தியக்கூறு இல்லாததால், பின்னர் சுப்பிரமணியின் மனைவி திலகவதியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, திலகவதி முன்னுக்கு பின் முரணாகவே பேசிக்கொண்டிருந்தார். இதனால், சந்தேகமடைந்த காவல் துறையினர், துருவி துருவி கேள்வி கேட்டனர். ஒரு கட்டத்தில் அவர், கூலிப்படையை வைத்து கணவனை கொலை செய்ய முயன்றதை ஒப்புக்கொண்டார்.