தமிழ்நாடு

tamil nadu

3 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @3PM

By

Published : Nov 8, 2021, 3:01 PM IST

ஈடிவி பாரத்தின் மாலை 3 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

TOP TEN NEWS AT 3 PM
TOP TEN NEWS AT 3 PM

1.மழை வெள்ள பாதிப்பில் மக்களுடன் இரண்டாவது நாளாக ஸ்டாலின்!

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொண்டார்.

2.மீனவர்களே! உடனடியாக கரை திரும்புங்கள் - எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்

"நவம்பர் 9, 10, 11, 12 தேதிகளில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும், ஆழ் கடலில் மீன் பிடிக்க சென்றவர்கள் நவம்பர் 9ஆம் தேதிக்குள் கரை திரும்புமாறு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியால் வடதமிழகத்தில் அதீத மழை பெய்யும்" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.இரண்டாவது நாளாக ஆய்வில் ஸ்டாலின்...

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழை கொட்டி தீர்த்த காரணத்தினால், பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியது. இதனை நேற்று (நவ.7) முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்ட நிலையில், இன்று (நவ.8) இரண்டாவது நாளாக ஆய்வு செய்தார்.

4.தயாநிதி மாறன், கனிமொழி மீதான அவதூறு வழக்குகள் ரத்து

திமுக எம்.பிக்கள் கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5.மழையால் கரண்ட் கட்டா? - இந்த எண்ணுக்கு அழைக்கலாம்!

மழையால் ஏற்படும் மின்பாதிப்புகள் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க மின்னகம் 94987 94987 என்கிற எண்ணுக்கு தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

6.'மழை பிடிக்காத மனிதன்': விஜய் ஆண்டனி - விஜய் மில்டன் கூட்டணி!

'சலீம்' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தை விஜய் மில்டன் இயக்க விஜய் ஆண்டனி நடித்து வருகிறார்.

7.பண மோசடி விவகாரம் - முன்னாள் ஐபிஎஸ் அலுவலர் மீது வழக்கு

பண மோசடி விவகாரத்தில் முன்னாள் ஐபிஎஸ் அலுவலர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

8.கிருஷ்ணம்மாள் ஜகன்நாதன் உள்ளிட்ட 119 பேருக்கு பத்ம விருது வழங்கப்பட்டது

2020ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கினார்.

9.பணமதிப்பிழப்புக்கு பின்னும் உயர்ந்து வரும் ரூபாய் நோட்டுகளின் புழக்கம்!

இந்திய ரிசர்வ் வங்கி தரவுகளின்படி, நவம்பர் 4, 2016 அன்று புழக்கத்தில் இருந்த நோட்டுகள் ரூ.17.74 லட்சம் கோடியிலிருந்து, அக்டோபர் 29, 2021 நிலவரப்படி ரூ.29.17 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அக்டோபர் 30, 2020 நிலவரப்படி ரூ.26.88 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.

10.ராசாக்கண்ணு மனைவி பார்வதி அம்மாளுக்கு என் சொந்த செலவில் வீடு - நடிகர் ராகவா லாரன்ஸ் உறுதி

செய்யாத குற்றத்துக்காக சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளின் இன்றைய வாழ்க்கைநிலையை பார்த்தபோது என்னை பெரிதும் பாதித்தது. பார்வதி அம்மாவுக்கு எனது செலவில் வீடு கட்டிக் கொடுப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் உறுதியளித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details