'மழை பிடிக்காத மனிதன்': விஜய் ஆண்டனி - விஜய் மில்டன் கூட்டணி!

author img

By

Published : Nov 8, 2021, 12:29 PM IST

Salim

'சலீம்' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தை விஜய் மில்டன் இயக்க விஜய் ஆண்டனி நடித்து வருகிறார்.

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘சலீம்’ திரைப்படம், விமர்சன ரீதியில் பாராட்டுக்களையும் வசூல் ரீதியிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தில் விஜய் ஆண்டனியின் அற்புதமான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இப்போது 'சலீம்' படத்தின் இரண்டாவது பாகமாக 'மழை பிடிக்காத மனிதன்' உருவாகுகிறது. விஜய் மில்டன் இயக்கும் இப்படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு டையூ - டாமன் யூனியன் பிரதேசத்தில் நடைபெற்று வருகிறது. இதில் விஜய் ஆண்டனியுடன் மேகா ஆகாஷ், சரத்குமார் தனஞ்செயா, ப்ருத்வி அம்பர், சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, தலைவாசல் விஜய், சுரேந்தர் தாகூர் பிரணிதி, இயக்குநர் ரமணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

'மழை பிடிக்காத மனிதன்' திரைப்படம் கதாநாயகனின் வாழ்க்கையில் பத்து அத்தியாயங்களை காலவரிசைப்படி கடந்து செல்லும் தனித்துவமான, வித்தியாசமான கதைக்களத்துடன் அதிரடி ஆக்சன் காட்சிகளாக உருவாகி வருகிறது.

விஜய் மில்டன் இப்படத்தை இயக்குவது மட்டுமல்லாது அவரே ஒளிப்பதிவும் செய்கிறார். விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தை கமல் போஹ்ரா, லலிதா தனஞ்செயன், விக்ரம் குமார் உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

இதையும் படிங்க: சம்பளம் வாங்காமல் நடிக்க ஆசை - விஜய் ஆண்டனி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.