தமிழ்நாடு

tamil nadu

இரவு 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 7 PM

By

Published : Nov 4, 2021, 7:40 PM IST

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

top 10 news 7 pm
top 10 news 7 pm

1.திரையில் கண்ட அனைத்து உணர்ச்சிகளும் நிஜம்; நடிப்பு அல்ல! - நடிகர் கார்த்தி

நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படத்தைப் பாராட்டி, தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் கார்த்தி பதிவிட்டுள்ளார்.

2.மாநகராட்சியாக தரம் உயர்ந்தது 'தாம்பரம்'

தாம்பரத்தை தனி மாநகராட்சியாக அறிவித்து தமிழ்நாடு அரசு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது.

3.அனுமதியை மீறி பட்டாசு வெடித்ததாக சென்னையில் 22 வழக்குகள் பதிவு!

அனுமதித்த நேரத்தைக் கடந்து பட்டாசு வெடித்தவர்கள் மீது இன்று நண்பகல் 1 மணி வரை போடப்பட்டுள்ள வழக்குகளின் நிலவரம் குறித்து காவல் துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

4.உணவுப் பஞ்சம்: ஆப்கனில் மகள்களை விற்கும் பெற்றோர்!

ஆப்கானிஸ்தானில் உணவுக்கு கடும் நெருக்கடி உருவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் பாதிக்கும் மேற்பட்டோர் மிகக் கடுமையான உணவுத் தட்டுப்பாட்டை சந்தித்து வருவதாக ஐ.நா. எச்சரித்துள்ள சூழலில், இதன் காரணமாக சொந்த மகள்களை விற்கும் அவல நிலைக்கு அந்நாட்டின் பெற்றோர் தள்ளப்பட்டுள்ளனர்.

5.பட்டாசு வெடித்ததில் தந்தை, மகன் உடல் சிதறி உயிரிழப்பு - தீபாவளியில் சோகம்

புதுச்சேரி அருகே இருசக்கர வாகனத்தில் நாட்டுப் பட்டாசுகளை மூட்டையில் ஏற்றிச்சென்றபோது, எதிர்பாராதவிதமாக பட்டாசுகள் வெடித்து சிதறியதில் தந்தை, 7 வயது மகன் உயிரிழந்தனர்.

6.ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரூ.12 லட்சம் மோசடி செய்த ஊழியர் கைது!

ரயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக ரூ.12 லட்சம் மோசடி செய்த ரயில்வே ஊழியர் வெங்கடேசனை காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

7.சரியாக தூர்வாரப்படாத வடிகால் - ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர் நீரில் மூழ்கி நாசம்

தரங்கம்பாடி அருகே சேத்தூர் கிராமத்தில் வடிகால் வாய்க்கால் முறையாக தூர்வாராததால் ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

8.நரிக்குறவர், இருளர் இன மக்களுக்கு ரூ. 4 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்!

பூஞ்சேரி பகுதியில் வசிக்கும் நரிக்குறவர், இருளர் இனத்தைச் சேர்ந்த 282 நபர்களுக்கு ரூ. 4.53 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

9.'அண்ணாத்த' திரையிடப்பட்ட தியேட்டரில் பரபரப்பு - ரசிகர்கள் அலறியடித்து ஓட்டம்!

புதுச்சேரியில் 'அண்ணாத்த' படம் திரையிடப்பட்ட தியேட்டரில் பால் சீலிங் விழுந்ததால், படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் அலறியடித்து ஓடினர்.

10.விடிய விடிய மது விருந்து - குடித்த மூவரும் உயிரிழப்பு!

தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் ஆவலில் விடிய விடிய மது குடித்த மூவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details