ETV Bharat / crime

விடிய விடிய மது விருந்து - குடித்த மூவரும் உயிரிழப்பு!

author img

By

Published : Nov 4, 2021, 5:24 PM IST

three dies due to adequate liquor
three dies due to adequate liquor

தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் ஆவலில் விடிய விடிய மது குடித்த மூவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயம்புத்தூர்: தீபாவளி கொண்டாடுவதற்காக விடிய விடிய மது அருந்திய மூவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பாப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பார்த்திபன் (31), முருகானந்தம் (55), சக்திவேல் (61). நண்பர்களான மூவரும் நேற்றிரவு தீபாவளியைக் கொண்டாடுவதற்காக இரவு நீண்ட நேரம் மது அருந்தியுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலையும் 6 மணியளவில் மீண்டும் ஒரு முழுபாட்டில் மதுவை பிளாக்கில் வாங்கியுள்ளனர். அருந்ததியர் வீதி அருகிலுள்ள பாழடைந்த கட்டடத்தில் அமர்ந்து 3 பேரும் மது அருந்தியுள்ளனர். பின்னர் சக்திவேல் மட்டும் அந்த கட்டடத்தின் அருகில் அமர்ந்திருந்த நிலையில் மயங்கி விழுந்துள்ளார்.

three dies due to adequate liquor
விசாரணை நடத்தும் காவல் துறையினர்

முருகானந்தம் பாரதியார் சாலையில் மயங்கி விழுந்துள்ளார். இருவரையும் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்துள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் இருவரின் உடல் உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட நிலையில், இவர்களுடன் மது அருந்திய பார்த்திபனை உறவினர்கள் தேடிய போது, அவர் வீட்டில் உயிரிழந்து இருந்தது தெரியவந்தது. சம்பவம் குறித்து காட்டூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

three dies due to adequate liquor
விசாரணை நடத்தும் காவல் துறையினர்

உடனடியாக, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், பார்த்திபன் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இரவு மதுகுடித்த பின் மீண்டும் காலையில் பிளாக்கில் மதுபானம் வாங்கிய நிலையில், யாரிடம் மதுபானம் வாங்கப்பட்டது என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்கள் மது அருந்திய அந்த பாழடைந்த கட்டடத்தில் கைப்பற்றபட்ட மதுபானப்பாட்டிலை காவல் துறையினர்,பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர்.

இதையும் படிங்க: எது... எருமையோட விலை ரூ.30 கோடியா... சதர் திருவிழாவில் கவனம்பெறும் ஷாருக்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.