தமிழ்நாடு

tamil nadu

வரி ஏய்ப்பை தடுக்க சுற்றும் படை குழுக்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

By

Published : Jan 12, 2022, 8:08 AM IST

தமிழ்நாடு அரசு அறிவிப்பு

உரிய சான்றுகள் இல்லாமல் செல்லும் வாகனங்களைத் தடுப்பதற்காகவும், வரிஏய்ப்பை தடுப்பதற்காகச் சுற்றும் படை குழுக்களின் எண்ணிக்கையை 100ஆக உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சென்னை: 2021 முதல் 2022ஆம் ஆண்டிற்கான திருத்திய வரவு செலவு திட்டத்தில், வணிகவரித் துறையில் சுற்றும் படை குழுக்கள் 100ஆக அதிகரிக்கப்பட்டு, பட்டியல் இல்லாமல் செல்லும் வாகனங்களைத் தடுப்பதற்காக அவர்களுக்கு வாகனங்கள் மற்றும் RFID கருவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மேற்கண்ட அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு, வணிகவரித் துறையிலுள்ள சுற்றும் படை குழுக்களை 100ஆக உயர்த்தி, 10.01.2022 அன்று உரிய அரசு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

நெடுஞ்சாலை காவல் சுற்று வாகனங்களைப் போல் வணிகவரித் துறையில் சுற்றும் படை குழுக்களுக்கு 100 வாகனங்கள் வழங்குவதற்காக நேற்று ஜனவரி 11ஆம் தேதி, நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

சரக்கு வாகனங்களில் ஸ்கேனர் கருவிகள்

இவ்வாகனங்களில், GPS மற்றும் கேமராக்கள் பொருத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், சரக்குகள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் வரி ஏய்ப்பு செய்வதைத் தடுக்கும் பொருட்டு, இந்த வாகனங்கள் அனைத்திற்கும் National Electronic Toll Collection (NETC) FASTag - NPCI என்ற எலக்ட்ரானிக் ஸ்கேனர் கருவிகள் பொருத்தப்படும்.

வணிகவரித் துறையில், நவீனத் தொழில்நுட்பத்தின் மூலம் விலைப்பட்டியல் இல்லாமல் செல்லும் சரக்குகளின் நகர்வினை கண்காணிக்கும் இந்த 100 சுற்றும் படைகள், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள ‘மாநில கட்டுப்பாட்டு அறை’ வழியே கண்காணிக்கப்பட உள்ளன.

இது வரிஏய்ப்பை குறைக்கவும், வரிவசூலை மேம்படுத்தவும் உதவியாக இருக்கும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கிராவல் மண் எடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு: மதுரை ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

TAGGED:

RFID tools

ABOUT THE AUTHOR

...view details