தமிழ்நாடு

tamil nadu

மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் ஸ்டாலின் மனு

By

Published : Jan 12, 2022, 10:25 PM IST

முதலமைச்சர் ஸ்டாலின் மனு

சென்னை தலைமைச் செயலகத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் 11 அம்ச கோரிக்கைகளை மனுவாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்தார்.

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகள், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கான புதிய கட்டடம் ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை தலைமைச் செயலகத்தில் மு.க. ஸ்டாலின், மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோர் காணொலி வாயிலாகக் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக சென்னை தலைமைச் செயலகத்தில் மன்சுக் மாண்டவியா, மு.க. ஸ்டாலினைச் சந்தித்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் மனு

அப்போது மன்சுக் மாண்டவியாவிடம்,

1. மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு விலக்கு

2. மதுரையில் அமைக்கப்படுமென அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைப் பணியை விரைவுப்படுத்த வேண்டும்

3. புதிய ஆறு மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் நிறுவுதல்

4. கோயம்புத்தூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்

5. முழு அரசு நிதியுதவி பெறும் மருத்துவ நிறுவனங்களுக்கான அகில இந்திய ஒதுக்கீடு ரத்து

6. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளில் 50 விழுக்காடு இடங்களை தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டும்

7. தமிழ்நாடு முழுவதும் 19 மாவட்டங்களில் மாவட்ட தலைமையக மருத்துவமனைகளை அமைக்க வேண்டும்

8. முதுகலை மருத்துவக் கல்வியின் வரைவு விதிமுறைகளுக்கு மாநில அரசு ஒதுக்கீட்டில் சுகாதாரப் பணிக்கான இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்

என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை மனுவாக ஸ்டாலின் அளித்தார்.

இதையும் படிங்க: நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வேண்டும் - மோடியிடம் ஸ்டாலின் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details