தமிழ்நாடு

tamil nadu

கரோனாவுக்கு இடையிலும் லட்சம் பேருக்கு புற்றுநோய் சிகிச்சை - அமைச்சர் விஜயபாஸ்கர்

By

Published : Sep 12, 2020, 12:03 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்று காலத்திலும் 1,31,352 பேர் புற்றுநோய் சார்ந்த மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

vijayabaskar
vijayabaskar

இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனா தொற்று காலத்திலும் கரோனா தொற்று அல்லாத பிற நோயாளிகளுக்கும் தங்கு தடையின்றி சிறப்பான முறையில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுவருகின்றன. மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில், மார்ச் 2020 முதல் இதுவரை 1,31,352 பேர், புற்றுநோய் சார்ந்த மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனர்.

அவர்களில் 48,647 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 250 புற்றுநோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று ஊரடங்கு காலத்திலும் அரசின் 102 வாகன சேவை மூலம், வீடுகளிலிருந்து மருத்துவமனைக்கும், சிகிச்சை முடிந்தபின் மீண்டும் வீடுகளிலும் புற்றுநோயாளிகள் கொண்டுசேர்க்கப்பட்டனர்“ என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சென்னையில் 1320 பேருக்கு‌ பி.சி.ஆர் பரிசோதனை!

ABOUT THE AUTHOR

...view details