தமிழ்நாடு

tamil nadu

பயணியால் தாக்கப்பட்டு உயிரிழந்த அரசுப் பேருந்து நடத்துநர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் ரூபாய் நிவாரணம்

By

Published : May 14, 2022, 2:30 PM IST

பயணியால் தாக்கப்பட்டு உயிரிழந்த அரசுப் பேருந்து நடத்துநர் குடும்பத்துக்கு பத்து இலட்சம் ரூபாய் நிவாரணம் -முதலமைச்சர்

பணியிலிருக்கும்போது பயணியால் தாக்கப்பட்டு உயிரிழந்த அரசுப் பேருந்து நடத்துநரின் குடும்பத்துக்கு பத்து லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

சென்னை :இதுகுறித்து முதலமச்சர் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னையிலிருந்து விழுப்புரம் நோக்கி வரும்போது, இன்று(மே14) அதிகாலை 3.15 மணியளவில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் கிளையைச் சார்ந்த அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. மதுராந்தகத்தில் குடிபோதையில் பேருந்தில் ஏறிய முருகன் என்ற பயணியிடம் நடத்துநர் தி.பெருமாள் பிள்ளை, பயணச்சீட்டு எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

அப்போது அந்தப் பயணி நடத்துனரை தாக்கியுள்ளார். இதன் காரணமாக, நடத்துநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, உடனடியாக அவர் மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இரங்கல்: இந்த துயரமான செய்தியைக் கேள்வியுற்று மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந்த அரசுப் பேருந்து நடத்துநர் தி.பெருமாள் பிள்ளையின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், உயிரிழந்த அரசுப் பேருந்து நடத்துநரின் குடும்பத்திற்கு உடனடியாக பத்து இலட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கிடவும் போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:டிக்கெட் வாங்க மறுத்து, பயணி தாக்கியதில் கண்டக்டர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details