தமிழ்நாடு

tamil nadu

'சினிமாகாரர்கள் பின்னால் செல்வதை பாஜக கைவிடவேண்டும்..!' - சுப்பிரமணிய சுவாமி

By

Published : Jun 7, 2019, 6:09 PM IST

சுப்ரமணிய சுவாமி

சென்னை: "தனித்துப் போட்டியிட்டால்தான் தமிழ்நாட்டில் பாஜகவின் பலம் தெரியும். சினிமாக்காரர்கள் பின்னால் செல்லும் கொள்கையை பாஜக கைவிட வேண்டும்" என்று, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,

"தமிழ்நாட்டில் தனித்துப் போட்டியிட்டால்தான் பாஜகவின் எதிர்காலம் தெரியும். தனியாக நிற்பதற்கு பாஜகவுக்கு போதிய பலம் இருக்க வேண்டும். இதற்கு தமிழக பாஜக பொறுப்பாளர் ராஜினாமா செய்வதோடு மட்டுமல்லாமல், சினிமாக்காரர்கள் பின்னால் செல்லும் கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மும்மொழிக் கொள்கை இருக்கும்போது, தமிழ்நாட்டில் ஏன் இருக்கக் கூடாது? அண்ணா காலத்தில் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இரு மொழிக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்து இருக்கலாம், ஆனால் அதற்கு சட்டத்தில் இடமில்லை.

சினிமாகாரர்கள் பின்னால் செல்வதை பாஜக கைவிடவேண்டும்

தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்னையை தீர்க்க கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை தவிர வேறு வழியே இல்லை. அதேபோல் நீண்ட காலமாக அரசியலுக்கு வருவதாக ரஜினி சொல்லிக் கொண்டு இருப்பது நாடகம் போல் உள்ளது. பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் நிலைப்பாட்டில் அவர் இருக்கிறார். இல்லையென்றால் அவர் பாஜகவின் கொள்கைகளை ஆதரிக்க வேண்டும்" என்றார்.

Intro:பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி சென்னை விமான நிலையத்தில் பேட்டி


Body:பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி சென்னை விமான நிலையத்தில் பேட்டி

தனித்துப் போட்டியிட்டால் தான் தமிழகத்தில் பாஜகவுக்கு எதிர்காலம் தனியாக நிற்பதற்கு பாஜகவுக்கு தெம்பு இருக்க வேண்டும்

தமிழக பாஜக பொறுப்பாளர் ராஜினாமா செய்ய வேண்டும் ஆனால் அது மட்டும் போதாது சினிமாக்காரர்கள் பின்னால் செல்லும் கொள்கையை பாஜக மாற்ற வேண்டும்

எல்லா மாநிலங்களிலும் மும்மொழிக் கொள்கை இருக்கும் போது தமிழகத்தில் ஏன் இருக்கக்கூடாது அண்ணா காலத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இரு மொழிக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்து இருக்கலாம் ஆனால் அதற்கு சட்டத்தில் இடமில்லை

தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை தவிர வேறு வழியே இல்லை என தெரிவித்தார்

ரஜினிகாந்த் நீண்ட காலமாக அரசியலுக்கு வருவதாகச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார் அது நாடகம் போல் தெரிகிறது அவர் பாஜகாவுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கிறார் எனில் பாஜகவின் கொள்கைகளை ஆதரிக்க வேண்டும் ஆனால் அவ்வாறு செய்யவில்லை


Conclusion:இவ்வாறு பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமிதான் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்

ABOUT THE AUTHOR

...view details