தமிழ்நாடு

tamil nadu

5,477 கிலோ கஞ்சா பறிமுதல் - போதைப் பொருள் தடுப்புப் பிரிவு நடவடிக்கை

By

Published : Jul 10, 2020, 12:32 AM IST

டெல்லி: தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இந்தியா முழுவதும் நடத்திய சோதனையில் 5,477 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்

Ganja seized
Ganja seized

ஆந்திரப் பிரதேசம் - ஒடிசா எல்லையில் இருந்து 5,477 கிலோ கஞ்சாவை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) கைப்பற்றியுள்ளது, இங்கிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அதிக அளவு கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக உளவுத் துறையின் சார்பில் தகவல் கிடைத்துள்ளது.

இத் தகவலின் அடிப்படையில் தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு பல நடவடிக்கைகளை இந்தியா முழுவதும் மேற்கொண்டது. இதையடுத்து இதுதொடர்பாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு வெளியிட்ட அறிக்கையில், இந்த நடவடிக்கை ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மட்டுமல்லாது நாட்டின் பல பகுதிகளில் நடக்கும் கடத்தலுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும்.

இந்த கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரிகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஆய்வில் வெவ்வேறு பகுதிகளில் இருந்து இதுவரை 5,477 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதேசமயம் இதில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் 2 ஆம் தேதி ஆந்திரப் பிரதேசம் விஜயவாடா வழியாக செல்லப்பட்ட கனரக லாரி துவாரங்களில் மறைத்து வைக்கப்பட்ட 515 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த ஜூன் 22ஆம் தேதி கொல்கத்தாவில் மண்டல தடுப்புப் பிரிவினர் டோல் பிளாசா-வில் வைத்து தேங்காய் ஏற்றி வந்த லாரியில் 1,133 கிலோ கைப்பற்றப்பட்டது. அச்சமயத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details