தமிழ்நாடு

tamil nadu

பாரூர் ஏரியிலிருந்து ஜூலை 2ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படும் !

By

Published : Jun 30, 2020, 3:01 PM IST

சென்னை : கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் பெரிய ஏரியிலிருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறக்க தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

பாரூர் ஏரியிலிருந்து ஜூலை 2 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படும் !
பாரூர் ஏரியிலிருந்து ஜூலை 2 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படும் !

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியிலிருந்து ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதானக் கால்வாய்களில் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளை ஏற்று, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதானக் கால்வாய்களில் முதல் போக பாசனத்திற்கு பாரூர் பெரிய ஏரியிலிருந்து 2.7.2020 முதல் 13.11.2020 வரை மொத்தம் 135 நாள்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.

இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள 2397 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி உயர் மகசூல் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது". இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details