தமிழ்நாடு

tamil nadu

சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ள தமிழ்நாட்டின் 3 சதுப்பு நிலங்கள் - முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு!

By

Published : Jul 27, 2022, 10:09 AM IST

சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ள தமிழ்நாட்டின் 3 சதுப்பு நிலங்கள் - முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு!

தமிழ்நாட்டில் உள்ள 3 சதுப்பு நிலங்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்கள் பற்றிய ராம்சார் மாநாடு என்பது ஈரநிலங்களின் பாதுகாப்பு மற்றும் நிலையான பயன்பாட்டிற்கான ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும். 1971 ஆம் ஆண்டில் ஒப்பந்தம் கையெழுத்தான ஈரானில் உள்ள ராம்சார் நகரத்தின் நினைவாக, இது ’ராம்சார் தளம்’ என்று அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 3 சதுப்பு நிலங்கள், மிசோரம் மற்றும் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள தலா ஒரு சதுப்பு நிலம் ஆகியவை சர்வதேச ராம்சார் அங்கீகாரத்தை பெற்றுள்ளன.

இதன்படி தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கரிக்கிளி பறவைகள் சரணாலயம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சாவரம் சதுப்பு நிலம் ஆகியவை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ள தமிழ்நாட்டின் 3 சதுப்பு நிலங்கள் - முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு!

மேலும் மிசோரம் மாநிலத்திலுள்ள பாலா சதுப்பு நிலம் மற்றும் உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சாக்யா சாகர் சதுப்பு நிலம் ஆகியவையும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தியாவில் உள்ள ராம்சர் அங்கீகாரம் பெற்ற இடங்களின் எண்ணிக்கை 49 லிருந்து 54 ஆக அதிகரித்துள்ளது.

இதற்காக தனித்துவமான மற்றும் பழமையான இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்காக அரசு பல முயற்சிகளையும் எடுத்துள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், "இயற்கை சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதற்கும் அதனை முறையாக பயன்படுத்துவதற்கும் இந்த அரசின் முயற்சிகளில் தமிழ்நாடு சதுப்பு நில இயக்கமும் ஒன்றாகும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டுள்ள முன்முயற்சி, சதுப்பு நிலங்களை இந்தியா எவ்வாறு பராமரித்து முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பதைக் காட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பாராட்டு பதிவில், “பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பிச்சாவரம் சதுப்பு நிலங்கள் மற்றும் கரிக்கிளி பறவைகள் சரணாலயம் ஆகியவை இப்போது புதிய ராம்சார் தளங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இது சதுப்பு நிலங்களுக்கான சர்வதேச அங்கீகாரம்.

தமிழ்நாடு இப்போது கோடியக்கரை உட்பட நான்கு ராம்சார் தளங்களைக் கொண்டுள்ளது. இந்த மைல்கல்லில் தமிழ்நாடு வனத்துறையை வாழ்த்துகிறேன்” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: காடுகள் அழிப்பால் பெரும்பாலான மக்கள் சுற்றுச்சூழல் அகதிகளாக மாறக்கூடும்: வன ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details