தமிழ்நாடு

tamil nadu

puducherry christmas : புதுச்சேரி தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு

By

Published : Dec 25, 2021, 3:32 PM IST

puducherry christmas :புதுச்சேரியில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு பிராத்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று கரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்றில் இருந்து உலக மக்களை காக்க வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தினர்.

கிருஸ்துமஸ் சிறப்பு பிராத்தனை
கிருஸ்துமஸ் சிறப்பு பிராத்தனை

புதுச்சேரி:puducherry christmas : கிறிஸ்துவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் விழா புதுச்சேரியில் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

புதுச்சேரியில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் கிறிஸ்துமஸை ஒட்டி நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. மேலும் 12 மணிக்கு தூய ஜென்மராக்கின் பேராலயத்தில் குழந்தை இயேசுவின் சொரூபத்தை குடிலில் வைத்து வழிபாடு நடத்தினர்.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தட்டாஞ்சாவடியில் உள்ள பாத்திமா தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றார்.


இதேபோல் கரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்றிலிருந்து உலக மக்களை காக்க வேண்டி ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

இதையும் படிங்க:'நம் குடியிருப்பு நம் பொறுப்பு' திட்டத்தை நன்கு பராமரிக்க அறிவுறுத்தல்

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details