தமிழ்நாடு

tamil nadu

குடியரசுத் தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு!

By

Published : Jun 9, 2022, 4:29 PM IST

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு
குடியரசுத் தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு

டெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று (ஜூன் 9) டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 'குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும். ஜூலை 21ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இந்தியாவில் குடியரசுத்தலைவரை மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்கிறார்கள். அதன்படி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.க்களாக உள்ள உறுப்பினர்கள், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசத்தின் சட்டப்பேரவை உறுப்பினர்கள், குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கலாம்.

அதேபோல், மக்களவை, மாநிலங்களவை, சட்டப்பேரவையில் உள்ள நியமன உறுப்பினர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியாது. இந்த தேர்தலில் 776 எம்.பி.க்களும்; 4,033 எம்.எல்.ஏக்களும் வாக்களிக்க உள்ளனர்' என்று ராஜீவ் குமார் தெரிவித்தார்.

இதையும் படிங்க:தமிழ்நாடு அரசின் மாநில கல்வி கொள்கை குழு : ஜூன் 15 முதல் கூட்டம்...

ABOUT THE AUTHOR

...view details