ETV Bharat / state

தமிழ்நாடு அரசின் மாநில கல்வி கொள்கை குழு : ஜூன் 15 முதல் கூட்டம்...

author img

By

Published : Jun 9, 2022, 2:25 PM IST

தமிழ்நாடு அரசின் மாநில கல்வி கொள்கை குழுவின் முதல் கூட்டம் ஜூன் 15 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.

first-meeting-of-state-education-policy-committee-is-scheduled-for-june-15-under-chairmanship-of-cm-stalin ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அரசின் மாநில கல்வி கொள்கை குழுவின் முதல் கூட்டம்
first-meeting-of-state-education-policy-committee-is-scheduled-for-june-15-under-chairmanship-of-cm-stalin ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அரசின் மாநில கல்வி கொள்கை குழுவின் முதல் கூட்டம்

சென்னை: தமிழ்நாடு அரசின் மாநிலக் கல்வி கொள்கைக் குழுவின் முதல் கூட்டம் ஜூன் 15 ஆம் தேதி தலைமைச்செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக தமிழ்நாட்டில் மாநில கல்விக் கொள்கை வடிவமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அந்த அடிப்படையில் தமிழ்நாடு அரசின் மாநில கல்வி கொள்கைக்காக கல்வியாளர்கள், வல்லுநர்கள் கொண்ட மாநில அளவிலான குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தார்.

இந்த குழு, ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில் சவீதா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எல்.ஜவகர் நேசன், தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவனத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் ராமானுஜம், மாநில திட்டக் குழு உறுப்பினர்கள் சுல்தான் இஸ்மாயில், ராம சீனுவாசன், யுனிசெப் முன்னாள் கல்வி நிபுணர் அருணா ரத்னம், உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

கல்வியியல் எழுத்தாளர் மாடசாமி, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, கல்வியாளர் துளசிதாஸ், அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இரா.பாலு, அகரம் அறக்கட்டளை தலைவர் ஜெயஸ்ரீ தாமோதரன் ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

இதையும் படிங்க: தாய்மொழிக்கல்விக்கு ஊக்கமளியுங்கள் - கல்வி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.