தமிழ்நாடு

tamil nadu

நேதாஜி பிறந்த நாளில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மரியாதை

By

Published : Jan 23, 2023, 8:50 AM IST

நேதாஜி
நேதாஜி ()

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் உள்ள அவரது உருவப் படத்திற்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்துகிறார்.

டெல்லி: சுதந்திர போராட்ட வீரரும் இந்திய ராணுவத்தை நிறுவியவருமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள் இன்று (ஜனவரி 23) கொண்டாடப்படுகிறது. இந்த நாளை முன்னிட்டு நாடாளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்து மரியாதை செலுத்தப்படுகிறது.

நேதாஜியின் உருவபடத்திற்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்துகிறார். பிரதமர் மோடியை தொடர்ந்து, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், முன்னாள் எம்பிக்கள் உள்ளிட்டோர் நேதாஜியின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்துகின்றனர்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் அளப்பரியா பங்கை விவரிக்கும் வகையில், 1978ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் நேதாஜியின் உருவப்படத்தை அப்போதைய குடியரசுத் தலைவர் என்.சஞ்ஜீவ ரெட்டி திறந்து வைத்தார்.

நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்களையும், தேசத்தின் அடையாளமாக திகழ்ந்தவர்களின் வாழ்க்கை மற்றும் பங்களிப்புகளையும் இளைஞர்களிடையே கொண்டு சேர்க்க இதுபோன்ற நிகழ்வுகள் உதவும் என்று மக்களவை செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மக்களவை செயலகத்தில் உள்ள ஜனநாயகங்களுக்கான நாடாளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் உங்கள் தலைவர்களை அறிவோம் திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம், கடந்த டிசம்பர் 25ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் 8 மலர் அஞ்சலில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி மகாத்மா காந்தி மற்றும் லால் பக்தூர் சாஸ்திரியின் பிறந்த நாளை முன்னிட்டு திடடம் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெறும் நிகழ்வுகளில் இதுவரை ஆயிரத்து 168 பேர் கலந்து கொண்டு உள்ளதாக மக்களவை செயலகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:Viral Video - காங்கிரஸ் நிகழ்ச்சியில் ஆபாச நடனம்

ABOUT THE AUTHOR

...view details