ETV Bharat / bharat

பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை குற்றவாளி கோல்டி பிரார் சுட்டுக் கொலையா? அமெரிக்க போலீசார் கூறுவதென்ன? - Goldy Brar

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 2, 2024, 3:55 PM IST

Etv Bharat
Etv Bharat

பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த கோல்டி பிரார் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவலை அமெரிக்கா மறுத்துள்ளது.

ஐதராபாத்: பஞ்சாப்பை சேர்ந்த பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக பல்வேறு காலிஸ்தானிய அமைப்புகள் மீதும் குற்றம்சாட்டப்பட்டு வந்த நிலையில், பிரபல ரவுடி குழுவான லாரன்ஸ் பிஷ்னோய் குழுவினர், மூஸ்வாலா கொலைக்கு பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இது தொடர்பாக சத்விந்தர் சிங் என்கிற கோல்டி பிராரை போலீசார் தேடி வந்தனர். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே கனடாவிற்கு தப்பிச் சென்ற கோல்டி பிரார் மீது 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆள் கடத்தல், பணம் கேட்டு மிரட்டுதல், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து கடந்த 2022ஆம் ஆண்டு இன்டர்போல் போலீஸார் கோல்டி பிரார்க்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கினார். இதனால் கோல்டி அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றார். அமெரிக்காவின் பிரஸ்னோ நகரில் அவர் வசித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்நகரில் இரு குழுக்களுக்கிடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் கோல்டி பிரார் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.

இதனிடையே இது குறித்து அமெரிக்க போலீஸார் தற்போது விளக்கம் அளித்துள்ளனர். அதன்படி துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தது உண்மை தான் என்றும் ஆனால், அந்த நபர் கோல்டி பிரார் அல்ல என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர். அவர் கொல்லப்பட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான செய்தி உண்மையானது அல்ல என்றும் அதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அமெரிக்க போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1994 ஆம் ஆண்டு பஞ்சாப்பின் முக்சர் ஷாகிபில் பிறந்த சத்விந்த சிங் என்ற கோல்டி பிரார், தனது சகோதரர் குர்லெஜ் பிராரை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்தார். பின்னர் தடை செய்யப்பட்ட பாபர் கால்சா என்ற சர்வதேச காலிஸ்தானி இயக்கத்தில் கோல்டி பிரார் இணைந்தார். இதையடுத்து கடந்த 2022ஆம் ஆண்டு பிரபல பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

இதையும் படிங்க: ஆபாச வீடியோ வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் - ஆஜராகாவிட்டால் கைது நடவடிக்கை - எச்சரிக்கை! - Karnataka Prajwal Revanna Case

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.