தமிழ்நாடு

tamil nadu

ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் மரணம் - சிபிசிஐடி விசாரணை!

By

Published : Dec 28, 2022, 8:21 PM IST

ஒடிஷாவில் இரண்டு ரஷ்ய சுற்றுலாப்பயணிகள் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்தது குறித்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

Odisha
Odisha

ராயகடா(ஒடிசா): ரஷ்யாவைச் சேர்ந்த நான்கு சுற்றுலாப்பயணிகள் கடந்த 21ஆம் தேதி, ஒடிஷா மாநிலம் ராயகடா மாவட்டத்திற்கு வந்தனர். அவர்கள் சுற்றிப் பார்த்துவிட்டு ராயகடா நகரில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்ததாக தெரிகிறது.

இதனிடையே கடந்த 22ஆம் தேதி விளாடிமிர் என்ற சுற்றுலாப்பயணி ஹோட்டல் அறையில் சந்தேகத்திற்கு உரிய முறையில் இறந்து கிடந்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு பவெல் என்ற மற்றொரு சுற்றுலாப்பயணி ஹோட்டலின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும், சிறிது நேரத்தில் உயிரிழந்துவிட்டார்.

ரஷ்யர்கள் அடுத்தடுத்து மரணம் அடைந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பவெல் ஹோட்டல் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரியவந்தது.

இந்த நிலையில், ரஷ்யர்கள் மரணம் குறித்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சுனில் குமார் பன்சால் உத்தரவிட்டுள்ளார். ரஷ்ய சுற்றுலாப்பயணியான விளாடிமிர் இதய நோய் காரணமாக இறந்திருக்கலாம் என்றும், அதேநேரம் இறப்புக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் சுனில்குமார் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Tunisha Sharma: Ex-காதலருக்கு நீதிமன்றக் காவல் டிச.30 வரை நீட்டிப்பு!

ABOUT THE AUTHOR

...view details