தமிழ்நாடு

tamil nadu

Haryana violence : ஹரியானா வன்முறையில் உயிரிழப்பு ஐந்தாக உயர்வு, நுஹ் பகுதியில் ஊரடங்கு உத்தரவு

By

Published : Aug 1, 2023, 12:06 PM IST

வன்முறையில் சிக்கி உயிரிழந்து உள்ளவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட நூஹ் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஹரியானா தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என நுஹ் துணை கமிஷனர் பிரசாந்த் பன்வார் தெரிவித்து உள்ளார்.

Haryana violence : ஹரியானா வன்முறையில் உயிரிழப்பு ஐந்தாக உயர்வு, நுஹ் பகுதியில் ஊரடங்கு உத்தரவு
Haryana violence : ஹரியானா வன்முறையில் உயிரிழப்பு ஐந்தாக உயர்வு, நுஹ் பகுதியில் ஊரடங்கு உத்தரவு

நுஹ்: ஹரியானா மாநிலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட நுஹ் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது, மேலும் மோதல்களைத் தடுக்க மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களுக்கு மேல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நுஹ் மாவட்டத்தில் இரு குழுக்களுக்கிடையில் நடந்த வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்து உள்ளதாக போலிசார், செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 1ஆம் தேதி) தெரிவித்து உள்ளனர். குருகிராம் பகுதியில் ஒரு மசூதி தாக்கப்பட்டுள்ள சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திங்களன்று (ஜூலை 31ஆம் தேதி) நுஹ் மாவட்டத்தில் நடந்த குழு வன்முறையில் இரண்டு ஊர்க்காவல் படையினர் கொல்லப்பட்டனர். இந்த வன்முறை குருகிராம் பகுதியிலும் பரவிய நிலையில்ஒரு மசூதிக்கு தீ வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

நுஹ் மாவட்டத்தில் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை இணையதள சேவை துண்டிக்கப்பட்டு உள்ளது. ஜூலை 31ஆம் தேதி, இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டு பலர் உயிரிழந்ததை அடுத்து நூஹ் மாவட்டத்தில் மொபைல் இணையதள சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளன.

இந்த வன்முறை விவகாரம் குறித்து, காவல்துறையினர் உரிய விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இந்த பகுதியில், இணையதள சேவைகள் 3 நாட்களுக்கு நிறுத்தப்பட்டு உள்ளன. மாநிலத்தின் 5 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்கள் அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். வன்முறையில் சிக்கித் தவித்த அனைவரும் மீட்கப்பட்டு உள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக, மாவட்ட காவல்துறை துணை ஆணையர் பிரசாந்த் பன்வார் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த வன்முறை சம்பவம் குறித்து நுஹ் பொறுப்பு எஸ்பி நரேந்தர் பிஜர்னியா கூறியதாவது, இந்த வன்முறை சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. நுஹ் மாவட்டத்தில், த்ற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காவல்துறையைச் சேர்ந்த சிலரும், இந்த சம்பவத்தில் காயமடைந்து உள்ளனர். ஷோபா யாத்திரையின் போது மோதல் வெடித்து உள்ளது மற்றும் சம்பவத்திற்கான காரணம் ஆராயப்படுகிறது. இதுதொடர்பாக, சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு, பல்வேறு பகுதிகளில் இன்டர்நெட் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக, அவர் குறிப்பிட்டு உள்ளார்.

நுஹ் மாவட்டத்தின் அண்டை பகுதிகளுக்கு வன்முறை பரவாமல் தடுக்க அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். அப்பகுதியில் மீண்டும் வன்முறையைத் தூண்டும் தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளுக்கு எதிராக கடுமையான கண்காணிப்பு பராமரிக்கப்பட்டு வருகின்றன. பதற்றம் காரணமாக பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை : வன்முறை சம்பவங்களை அடுத்து ஹரியானா மாநிலத்தின் குருகிராமில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் செவ்வாய்க்கிழமை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கல்வி நிறுவன நிர்வாகங்களுக்கு மாவட்ட அதிகாரிகள் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட நீதிபதி நிஷாந்த் குமார் யாதவ் பிறப்பித்து உள்ளார்.

இதையும் படிங்க: Manipur violence: "மனித உரிமை அமைப்புகள் செயலிழந்து விட்டன" - கொந்தளித்த ஹென்றி டிபேன்!

ABOUT THE AUTHOR

...view details