தமிழ்நாடு

tamil nadu

ஹைதராபாத்தில் அமித் ஷா, ஜூனியர் என்டிஆர் சந்திப்பு

By

Published : Aug 22, 2022, 8:14 AM IST

ஹைதராபாத்தில்
ஹைதராபாத்தில்

ஹைதராபாத் நகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை , தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் சந்தித்து பேசினர்.

ஹைதராபாத்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்கு நேற்று (ஆக. 21) வருகை தந்தார். அவரை நடிகர் ஜூனியர் என்டிஆர் சந்தித்து பேசினார். முனுகோடு பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு, இரவு 10.26 மணிக்கு அமித் ஷா ஹைதராபாத் விமான நிலையம் வந்தார். அதைத் தொடர்ந்து அங்கு சென்ற ஜூனியர் என்டிஆரை மத்திய அமைச்சர் கிஷான் ரெட்டி, அமித் ஷாவிடம் அழைத்து சென்றார்.

தனியாக 20 நிமிடங்கள் : அமித் ஷாவுக்கு சால்வை அணிவித்து ஜூனியர் என்டிஆர் மரியாதை செய்தார். 45 நிமிடங்கள் வரை நீடித்த இந்த சந்திப்பில், 20 நிமிடங்கள் இருவரும் தனியாக உரையாடினர். அவர்களுடன் பாஜக கட்சியின் முக்கிய தலைவர்களான கிஷன் ரெட்டி, தருண்சுக், பண்டி சஞ்சய் ஆகியோர் உணவருந்தினர்.

சீனியர் என்டிஆர் குறித்து அமித் ஷா: இச்சந்திப்பின்போது, சீனியர் என்டிஆர்-ஐ அமித் ஷா குறிப்பிட்டு பேசியதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, என்டிஆரின் விஸ்வாமித்ரா, தனவீரசுர கர்ணா ஆகிய திரைப்படங்களை தான் கண்டுள்ளதாக ஜூனியர் என்டிஆரிடம் அமித் ஷா தெரிவித்துள்ளார். என்டிஆர் ஆந்திர முதலமைச்சராக இருந்தபோது அதிகாரிகள் சிறப்பாக பணியாற்றியதாக அமித் ஷா பாராட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைதரபாத்தில் அமித் ஷா, ஜூனியர் என்டிஆர் சந்திப்பு

இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில்,"திறமைவாய்ந்த நடிகரும், தெலுங்கு சினிமாவின் தனித்துவமானவருமான ஜூனியர் என்டிஆர்-ஐ ஹைதராபாத்தில் சந்தித்து பேசியதில் மகிழ்ச்சி" என பதிவிட்டுள்ளார்.

குறிப்பாக, முனுகோடு சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவே அமித் ஷா ஹைதராபாத் வருகை புரிந்தார். அந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தெலங்கானா மக்களின் நம்பிக்கைக்கு தற்போதைய அரசு துரோகமிழைத்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், பாஜகவில் ராஜகோபால் ரெட்டி இணைந்ததுதான் கேசிஆர் அரசை வேரறுக்கும் பணியின் தொடக்கம் என்றும் அவர் கூறினார்.

கேசிஆர் குடும்பத்தின் ஏடிஎம்: "பிரதம மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டத்தை தெலங்கானா விவசாயிகளுக்கு முதலமைச்சர் கேசிஆர் தடுக்கிறார். இதன்மூலம், விவசாயிகளுக்கு காப்பீடு அளிக்காத பாவம் அவரையே சேரும். கேசிஆர் அரசு விவசாயிகளுக்கு எதிரானது.

கேசிஆரின் குடும்பம் பெரியது. ஆனால், அதற்காக அவர்களின் செலவை எதற்கு தெலங்கானா மக்கள் சுமக்க வேண்டும். காலீஸ்வரம் லிஃப்ட் பாசனத்திட்டம் என்பது கேசிஆர் குடும்பத்திற்கான ஏடிஎம்" என்று கூறிய அவர், அத்திட்டத்தில் கேசிஆர் அரசு ஊழல் செய்வதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும்,"அவர்கள் ஆட்சியமைத்தால், தலித் ஒருவரை முதலமைச்சராக்குவோம் என வாக்கு கொடுத்தார்கள். ஆனால், இதுவரை அவர்கள் அதை செய்யவில்லை. மீண்டும் அவர்களுக்கு ஆட்சியைக் கொடுத்தால், கேசிஆர்-க்கு பதிலாக அவரது மகன் கேடிஆர் முதலமைச்சராவாரே ஒழிய, தலித் ஒருவரை அவர்கள் ஒருபோதும் கொண்டு வர மாட்டார்கள்" என்றார். கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன், ஸ்ரீ உஜ்ஜைனி மகாகாளி மாத கோயிலில் அமித் ஷா சாமி தரிசனம் செய்தார்.

இதையும் படிங்க:பொதுக்கூட்டத்திற்கு சென்ற தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்....விஜயவாடா சாலையில் போக்குவரத்து நெரிசல்

ABOUT THE AUTHOR

...view details