தமிழ்நாடு

tamil nadu

Delhi Metro: 'மெட்ரோவில் மதுபாட்டிலுக்கு அனுமதி' - டெல்லி மெட்ரோ விதித்த கண்டிஷன் என்ன தெரியுமா?

By

Published : Jun 30, 2023, 11:03 PM IST

டெல்லியில் மெட்ரோ ரயிலில் பாதுகாப்பான முறையில் நபருக்கு சீல் வைக்கப்பட்ட 2 மதுபாட்டில்களை கொண்டு செல்ல டெல்லி மெட்ரோ நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும் ரயிலுக்குள் மது அருந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

டெல்லி:மெட்ரோ ரயிலில் மதுபாட்டில்கள் உள்ளிட்டவைகளை கொண்டு செல்வதற்கு பயணிகளுக்கு அனுமதி மறுக்கபட்டிருந்தது. இந்த நிலையில், பயணத்தின்போது மதுபாட்டில்களை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தவண்ணம் இருந்தன.

இதனையடுத்து, டெல்லி மாநகரின் அனைத்து பகுதிகளிலும் மெட்ரோவில் பயணிக்கும் பயணிகளுக்கு இதற்கான அனுமதி வழங்குவது குறித்து டெல்லி மெட்ரோ நிர்வாகம் தரப்பில் பரிசீலிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து,மதுபாட்டில்களை பாதுகாப்பான முறையில் கொண்டு செல்வதற்கு டெல்லி மெட்ரோ நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது (Delhi Metro allows liquor bottles) அனைவரிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: ஆன்லைன் செய்தி சட்டம் எதிரொலி - கனடாவில் உள்ள செய்தி இணைப்புகளை நீக்க கூகுள் திட்டம்

டெல்லி மெட்ரோவில் ஏர்ப்போர்ட் எக்ஸ்பிரஸ் வழித்தடத்தை தவிர, பிற பகுதிகளில் மதுபாட்டில்களை எடுத்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக, டிஎம்ஆர்சியின் (Delhi Metro Rail Corporation - DMRC) சிஐஎஸ்எஃப் மற்றும் டிஎம்ஆர்சி அதிகாரிகள் அடங்கிய குழு பட்டியலை மதிப்பாய்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து, அக்குழுவின் பரிந்துரையின் படி திருத்தப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் ஒரு நபருக்கு இரண்டு சீல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதாக டெல்லி மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: Punjab: ரூ.4 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக கொடூர கொலை செய்த கும்பல் - அதிர வைக்கும் பின்னணி!

இதனிடையே, மெட்ரோவில் பயணிகள் செல்லும்போது போதிய பாதுகாப்போடு மதுபாட்டில்களை கொண்டு செல்ல வேண்டும் என்றும், மெட்ரோ ரயிலில் பயணிகள் யாரேனும் மதுபோதையில் சக பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படும் வகையில் பிரச்னையில் ஈடுபட்டால் அவர்கள் மீது உரிய சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். மேலும், மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (Central Industrial Security Force - CISF) (மெட்ரோ வசதிகளைப் பாதுகாக்கும் படை) மற்றும் DMRC ஆகியவற்றின் அதிகாரிகள் அடங்கிய குழு முந்தைய உத்தரவை மதிப்பாய்வு செய்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Etv Bharat Exclusive: வனம் தின்னும் பிளாஸ்டிக்.. குப்பை மேட்டில் மேயும் வனஉயிர்கள் - என்ன நடக்கிறது கோவையில்?

டெல்லி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று லோக் கல்யான் மார்க் மெட்ரோ நிலையத்தில் இருந்து விஸ்வ வித்யாலயா மெட்ரோ நிலையம் வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உயர்நீதிமன்றத்தில் முதல்முறையாக தெலுங்கு மொழியில் தீர்ப்பு - கேரளாவை தொடர்ந்து தெலங்கானாவிலும் அமல் !

ABOUT THE AUTHOR

...view details