தமிழ்நாடு

tamil nadu

நடுரோட்டில் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்த கார்… காரணம் என்ன?

By

Published : Mar 2, 2023, 10:08 PM IST

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்த காரணம் குறித்தும், அந்த காரில் இருந்து காணாமல் 4 நபர்கள் கொலை செய்யப்பட்டார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

Etv Bharat
Etv Bharat

சத்தீஸ்கர்கன்கேர் மாவட்டத்தின் சவாடி கிராமத்தில் மர்மமான விபத்தில் ஆளில்லாத கார் ஒன்று எரிந்து கொண்டிருந்தது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அந்த காரில் ராய்ப்பூரில் இருந்து நான்கு பேர் கிளம்பியதும், ஆனால் அந்த கார் எரிந்தபோது அதனுள் யாரும் இல்லாததும் தெரியவந்தது.

சராமா காவல் நிலைய போலீசார் நிதின் திவாரி இந்தச் சம்பவம் பற்றி கூறுகையில், “பகன்ஜுர் உள்ள நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்குச் சொந்தமான இந்த காரில் ராய்ப்பூருக்குச் செல்ல தங்களது வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளனர். ஆனால், கார் சவாடி கிராமத்தில் எரிந்தபோது, அந்த காரினுள் 4 பேர் கொண்ட குடும்பத்தில் எவரும் இல்லை. தடயவியல் நிபுணர்களுக்கு சம்பவ இடத்தில் குறிப்பிடத்தக்க தடயங்கள் எதுவும் சிக்கவில்லை.

மேலும் காணாமல் போன அந்த குடும்பத்தைச் சேர்ந்த 4 நபர்கள் கொலை செய்யப்பட்டார்களா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகிறோம்” எனக் கூறினார்.

இந்நிலையில் நேற்று ராஜஸ்தான் மாநிலம், ஜலுர் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர் தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் சித்தேஸ்வர் கிராமத்தில் உள்ள நர்மதா வாய்க்காலில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த குடும்பத்தில் எட்டு வயது சிறுவனின் உடல் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திரிபுராவில் ஆட்சியை கைப்பற்றுமா காங்கிரஸ்? திமோக கட்சி தலைவருடன் ரகசிய பேச்சுவார்த்தை!

ABOUT THE AUTHOR

...view details