ETV Bharat / bharat

திரிபுராவில் ஆட்சியை கைப்பற்றுமா காங்கிரஸ்? திமோக கட்சி தலைவருடன் ரகசிய பேச்சுவார்த்தை!

author img

By

Published : Mar 2, 2023, 2:21 PM IST

திரிபுராவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், திப்ரா மோத்தா கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் மேலிட உறுப்பினர்கள் திரிபுரா விரைந்துள்ளனர். திமோக - காங்கிரஸ் கூட்டணி வெற்றிகரமாக அமையும் பட்சத்தில் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

பிரத்யாத் மணிகிய தேபர்மா
பிரத்யாத் மணிகிய தேபர்மா

ஐதராபாத்: திரிபுராவின் கடைசி மகாராஜாவும், திரிபுரா பூர்வகுடிகள் முற்போக்கு கூட்டணியான திமோக கட்சியின் தலைவருமான பிரத்யாத் மணிகிய தேபர்மாவை சந்திக்க காங்கிரஸ் மேலிட உறுப்பினர்கள் அங்கு விரைந்துள்ளனர். 60 தொகுதிகளை கொண்ட திரிபுரா சட்டப் பேரவைக்கு கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இன்று (மார்ச்.2) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், மாநிலத்தில் பாஜக 32 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இடதுசாரிகள் கூட்டணியுடன் களமிறங்கி உள்ள காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், திரிபுராவின் கடைசி மகாராஜாவும், திரிபுரா பூர்வகுடிகள் முற்போக்கு கூட்டணி கட்சியின் தலைவருமான பிரத்யாத் மணிகிய தேபர்மா, 10 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றனர்.

மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்க ஏதுவான சூழல் நிலவுகிறது. அதேநேரம் காங்கிரஸ் மற்றும் திமோக கூட்டணி அமைக்கும் பட்சத்தில் பாஜக ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்படும் என கூறப்படுகிறது. மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் காங்கிரஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

காங்கிரஸ் மூத்த உறுப்பினர் ஜிதேந்திர சிங், திமோக கட்சி தலைவர் பிரத்யாத் மணிகிய தேபர்மாவுக்கு நன்கு பரீட்சயமானவர் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தலைமையிலான குழு, திரிபுரா சென்று தனியார் ரெசார்டில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் ஜிதேந்திர சிங் தலைமையிலான குழுவில் மூத்த காங்கிரஸ் தலைவர் முகுல் வாஸ்னிக் ஆகியோர் இடம்பெற்று இருப்பதாகவும் திமோக கட்சியை எப்படியாவது கூட்டணிக்கு கொண்டு வர பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதேநேரம், அசாம் முதலமைச்சர் ஹிம்மந்த பிஸ்வா சர்மாவும், திமோக தலைவருக்கு பரீட்சயமானவர் என்பதால் பாஜகவும் தங்கள் கூட்டணியில் திமோக கட்சியை இணைக்க கடுமையாக முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் காங்கிரஸ் உறுப்பினரான பிரத்யாத் மணிகிய தேபர்மா, முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் நல்ல நட்புறவில் இருந்தவர். அதேநேரம் பாஜகவுடன், திமோக கட்சி கூட்டணி அமைப்பது கஷ்டம் எனக் கூறப்படுகிறது. பழங்குடியின மக்கள் நீண்ட நாள் கோரிக்கைகளை பாஜக நிராகரித்து வருவதன் காரணமாக இந்த கூட்டணி அமைவது கடினம் என சொல்லப்படுகிறது.

அதேநேரம், பழங்குடியின மக்களின் தேவைகளை பூர்த்தி செய்பவர்களுடன் மட்டுமே நாங்கள் ஒத்துழைப்போம் என்றும், திரிபுராவின் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுவோம் என திமோக கட்சி செய்தி தொடர்பாளர் ஜித்தன் தேபுர்மா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஜி20 மாநாடு அலங்காரத்திற்கு வைத்த பூந்தொட்டிகளை திருடியவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.