தமிழ்நாடு

tamil nadu

சொகுசு காரில் சிறுமி கூட்டுப்பாலியல் வன்புணர்வு... 5 பேரில் 3 பேர் பள்ளி மாணவர்கள்...

By

Published : Jun 4, 2022, 12:04 PM IST

Updated : Jun 4, 2022, 12:44 PM IST

ஹைதராபாத்தில் சொகுசு காரில் 17 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

violence against a girl
கூட்டு வன்கொடுமை

ஹைதராபாத்:தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் மே 28ஆம் தேதி 17 வயது சிறுமியை 5 பேர் சொகுசு காரில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்தனர். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். முதல்கட்ட தகவலில், குற்றம்சாட்டப்பட்ட 5 பேரில் 3 பேர் பள்ளி மாணவர்கள் என்பதும், அனைவரும் செல்வாக்கு மிக்க குடும்பங்களைச் சேர்ந்தோர் என்பதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஹைதராபாத் மேற்கு மண்டல துணை காவல் ஆணையர் ஜோயல் டேவிஸ் கூறுகையில், "பாதிக்கப்பட்ட சிறுமியால் குற்றவாளிகளைப் அடையாளம் சொல்ல முடியவில்லை. அவரால் ஒருவரை மட்டுமே அடையாளம் சொல்ல முடிந்தது. சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ளோம்.

பப்புக்கு சென்ற சிறுமி:இந்த சம்பவ நாளன்று சிறுமி தனது தோழியுடன் ஜூபிலி ஹில்ஸில் உள்ள பப்புக்கு சென்றார். இரவு 11 மணி அளவில் தோழி கிளம்பிவிட்டதால், பப்பிலிருந்த இளைஞர் சிறுமியிடம் வீட்டில் விடுவதாக சொல்லி தனது காரில் கூட்டிச்சென்றார்.

அப்போது கார் ஆள் நடமாட்டம் இடத்தில் நிறுத்தப்பட்டு, காரில் இருந்து 5 பேரும் சிறுமியை கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்தனர். இதையடுத்து சிறுமி வீட்டிற்கு சென்றுள்ளார். அடுத்த நாள் காலை சிறுமியின் கழுத்தில் இருந்த காயங்களை பார்த்த தந்தை விசாரித்தபோது உண்மை தெரியவந்தது. அதனடிப்படையில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த வகையில் 5 பேர் மீதும் ஐபிசி பிரிவு 376D (கூட்டுப்பாலியல் வன்புணர்வு), போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று (ஜூன் 3) ஒருவரும், இன்று (ஜூன் 4) நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அரசியல்வாதிகளின் குடும்பத்தாருக்கு தொடர்பு உள்ளது என்பதற்கு ஆதாரமில்லை" எனத் தெரிவித்தார்.

முன்னதாக, இந்த குற்றத்தில் ஈடுபட்ட அனைவரும் செல்வாக்கு மிக்க குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் விசாரணை முறையாக நடைபெறவில்லை என்று தெலங்கானா மாநில பாஜக தலைவர் தலைவர் பண்டி சஞ்சய் குமார் தெரிவித்திருந்தார். அதேபோல ஆங்காங்கே பாஜக சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சிறுமியை காதலிப்பதாக கூறி வன்புணர்வு செய்த இளைஞர் கைது

Last Updated :Jun 4, 2022, 12:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details