தமிழ்நாடு

tamil nadu

இந்தியாவில் மெல்ல அதிகரிக்கும் கரோனா: புதிதாக 13ஆயிரம் பேருக்கு பாதிப்பு

By

Published : Jun 23, 2022, 8:15 PM IST

கரோனா
கரோனா ()

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 13 ஆயிரத்து 313 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

டெல்லி:ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இன்று (ஜூன் 23) தினசரி கரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டது.

அதன்படி, "கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் புதிதாக 13 ஆயிரத்து 313 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 33 லட்சத்து 44 ஆயிரத்து 958ஆக அதிகரித்துள்ளது. நேற்று (ஜூன் 22) 12 ஆயிரத்து 249 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில் இன்று கூடுதலாக 2 ஆயிரத்து 303 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 10 ஆயிரத்து 972 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதன்படி தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 27 லட்சத்து 36 ஆயிரத்து 27ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 38 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 24ஆயிரத்து 941ஆக உயர்ந்துள்ளது. தற்போது 83ஆயிரத்து 990 பேர் சிகிச்சையில் உள்ளனர். நாட்டில் இன்று காலை வரை 196.62 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் வேகமாகப் பரவும் பிஏ 4, பிஏ5 வகை கரோனா - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

ABOUT THE AUTHOR

...view details