சென்னை:நடந்த முடிந்த 5 மாநில சட்டப் போரவை தேர்தல்களில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 4 மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் இன்று (டிச. 3) அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைப்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.
இந்நிலையில் இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் காங்கிரஸின் தோல்வியை மறைமுகமாக விமர்சித்து உள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சனாதன தர்மத்தை அவமதித்தால் அதன் விளைவுகளை சந்திக்க வேண்டும்.