தமிழ்நாடு

tamil nadu

திருவிழா சீரியல் பல்புகளை கழற்றும்போது இருவர் உயிரிழப்பு.. செங்கம் அருகே சோகம்! - Two youths dead of electrocution

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 4, 2024, 10:10 PM IST

Youths dead due to electrocution: திருவண்ணாமலை மாவட்டம் மேல் வணக்கம்பாடி கிராமத்தில், சாமி உருவம் பதிக்கப்பட்ட சீரியல் விளக்குகளை அகற்ற முயன்ற இரு இளைஞர்கள் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனை முன் குவிந்த ஊர் மக்களின் புகைப்படம்
மருத்துவமனை முன் குவிந்த ஊர் மக்களின் புகைப்படம் (credits to Etv Bharat Tamil Nadu)

திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல் வணக்கம்பாடி கிராமத்தில், விநாயகர் வேல் முருகர் சிவபெருமான் அம்மன் நந்தியம் பெருமானுக்கு, ஊர் பொதுமக்கள் சார்பாக மகா கும்பாபிஷேக விழா நேற்று (மே 3) விமர்சையாக நடத்தப்பட்டது. இதையடுத்து விழா நிறைவடைந்த நிலையில், இன்று (மே 4) திருவிழாவிற்காக கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சாமி உருவம் பதிக்கப்பட்ட அலங்கார விளக்குகளை அகற்றும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது விளக்குகளை அகற்றிக் கொண்டிருந்த மேல் வணக்கம்பாடி காலனி பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் மற்றும் மேல் வணக்கம்பாடி பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் ஐயப்பன் ஆகிய இரு இளைஞர்கள் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில், இருவரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இந்நிலையில், அருகில் இருந்த கிராம மக்கள், உடனடியாக இருவரையும் மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.

இதையடுத்து இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். திருவிழா முடிவடைந்த நிலையில், இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்த மேல்செங்கம் போலீசார், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: திருவாரூரில் கார் - பைக் மோதல்; அரசு ஊழியர் உள்பட இருவர் உயிரிழப்பு! - Tiruvarur Bike Accident

ABOUT THE AUTHOR

...view details