தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழிசை சௌந்தரராஜன் தேர்தல் அறிக்கை வெளியீடு.. அது என்னப்பா 'அக்கா 1825'? - lok sabha election 2024

Tamilisai Soundararajan Election Manifesto: தென் சென்னை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், 'அக்கா 1825' என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

Tamilisai Soundararajan Election Manifesto
தமிழிசை சௌந்தரராஜன் தேர்தல் அறிக்கை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 16, 2024, 3:16 PM IST

சென்னை: தென் சென்னை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், 5 ஆண்டுகளுக்கு 365 நாட்கள் என்ற கணக்கில், 1825 நாட்களும் மக்கள் பணியாற்றுவேன் என்ற உறுதிமொழியுடன் 'அக்கா 1825' என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

தேர்தல் அறிக்கை பின்வருமாறு;

குடிநீர் மற்றும் மழை நீர் பிரச்சனைக்குத் தீர்வு:

  • கோதாவரி ஆற்றுநீரைச் சென்னைக்குக் கொண்டுவர நடவடிக்கை.
  • தென் சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர், பாதாளச் சாக்கடை திட்டப்பணிகள் விரைவுபடுத்த நடவடிக்கை.
  • நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுச் சீரமைக்கப்படும்.
  • மழை நீர் கால்வாய் அமைக்கப்படும்.
  • விருகம்பாக்கம் கால்வாயைத் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.
  • மழைக்காலங்களில் உடனடியாக உதவிக்கு வருவோர் பிரிவு (First responders project) அமைக்கப்படும்.
  • மீட்பு படகுகள், மருத்துவப் பொருட்கள், உயர் சக்தி கொண்ட நீரேற்றும் பம்புகள், மீட்பு டிரக்குகள் ஆகியவற்றைக் கொண்ட முதல் பதிலளிப்போர் முற்றம் (First responders yard) உருவாக்கப்படும்.

போக்குவரத்து பிரச்சனைக்குத் தீர்வு:

  • புதிய வழித்தடத்தில் மெட்ரோ-3 திட்டத்தைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
  • போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, மெட்ரோ ரயில்-2 திட்டப் பணிகள் விரைவுபடுத்தப்படும்.
  • வடபழனி, திருவான்மியூர், தி.நகர் பேருந்து நிலையங்கள் புதுப்பிக்கப்படும்.
  • வேளச்சேரி - பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் திட்டத்தை விரைந்து முடிக்கப்படும்.
  • சென்னை - கடலூர் இடையே கடல் வழி போக்குவரத்து.
  • அம்மா உணவகங்கள் போல், ரயில் நிலையங்களில் மோடி உணவகங்கள் அமைக்கப்படும்.

பொதுச் சுகாதாரம்:

  • தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சோழிங்கநல்லூரில் ESI அரசு மருத்துவமனை.
  • தேவைப்படும் இடங்களில் புதிதாக ஆரம்பச் சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.
  • தற்போதுள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்பச் சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்படும்.
  • நடமாடும் மருத்துவமனை திட்டம் தொடங்கப்படும்.
  • ரூ. 5 லட்சம் வரை இலவச மருத்துவம் பார்த்துக் கொள்வதற்கான பிரதமரின் காப்பீட்டுத் திட்டம்.
  • சட்டமன்றத் தொகுதிகளில் ஒவ்வொன்றிலும் 3 இலவச பொது உடற்பயிற்சி கூடங்கள்.
  • பொதுக் கழிப்பிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
  • நடமாடும் கழிப்பிடங்கள் ஏற்படுத்தப்படும்.
  • போதையில் இருந்து விடுவிப்பதற்கான மறுவாழ்வு மையம் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஏற்படுத்தப்படும்.

மாணவர் மற்றும் இளையோர் நலன்:

  • எம்.பியாக நான் பெரும் ஊதியம் முழுவதும், ஏழை மாணவர்களின் கல்விக்காகச் செலவிடப்படும்.
  • பள்ளிகளில், இளம் சிந்தனையாளர்களை ஊக்குவிக்கும், இளைஞர் நாடாளுமன்றம் உருவாக்கப்படும்.
  • விளையாட்டு மைதானங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  • சென்னை சவுத் ஒலிம்பியாட் விளையாட்டு நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும்.
  • வளரும் விளையாட்டு வீரர்களுக்கான பிரத்தியேக விளையாட்டு அரங்கம், 2027க்குள் அமைக்கப்படும்.
  • அரசு கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
  • ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஒரு அரசு கலைக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி அமைக்கப்படும்.
  • ஆண்டுக்கு இருமுறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும்.
  • நீட் உள்ளிட்ட மத்திய அரசின் நுழைவுத் தேர்வுகளை எழுதுவதற்கு, இலவச பயிற்சி மையங்கள்.
  • புதிய நூலகங்களை உருவாக்க நடவடிக்கை.
  • கூடுதல் தொழிற்பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பெண்கள் மற்றும் குடும்ப நலன்:

  • தென் சென்னை சட்டமன்றத் தொகுதிகளில் பணி புரியும் மகளிருக்கு விடுதி.
  • பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, குடியிருப்பு பகுதிகளில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள.
  • இளம்பெண் அரசியல்வாதிகளை ஊக்கப்படுத்தும் விதமாக 'வீரப் பெண் திட்டம்'
  • பெண்களுக்கான திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்.
  • பணிபுரியும் பெண்களுக்காக 'மோடி இலவச ஷேர் ஆட்டோக்கள்' இயக்கப்படும்.
  • ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் ஆறு சமுதாயக் கூடங்கள் அமைக்கப்படும்.

மீனவர் நலன்:

  • மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்பட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  • மீன் பிடி தொழில், வணிக முக்கியத்துவம் வாய்ந்த முதன்மை தொழிலாக மாற்ற நடவடிக்கை.
  • மிகப்பெரிய மீன் விற்பனை சந்தை அமைக்கப்படும்.
  • மீன்பிடி பகுதிகளில் உணவு பதப்படுத்துதல், மீன் குளிர் சாதன சேமிப்பு வசதிகள் வழங்கப்படும்.
  • மீனவ கிராமங்களில் உள்ள வீடுகள் சீர் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
  • மீனவ கிராமங்களில் நூலகங்கள், கணினி மையங்கள் அமைக்கப்படும்.
  • மீனவ இளைஞர் மேம்பாட்டுக்கு, பல திட்டங்கள் கொண்டுவரப்படும்.
  • திறந்த வெளி உடற்பயிற்சி கூடங்கள் (Open Gym) கடற்கரை ஓரங்களில் அமைக்க ஏற்பாடு.
  • மீன்களைப் போலக் கருவாடு தொழிலும், அதிக லாபம் ஈட்டும் தொழிலாக மாற்றப்படும்.

இதையும் படிங்க:'நயந்தாரா ஆடினால் பார்க்கும் நீங்கள்..இவர்களையும் பாருங்கள்' - நடிகர் ராகவா லாரன்ஸ் - Actor Raghava Lawrence

ABOUT THE AUTHOR

...view details