தமிழ்நாடு

tamil nadu

அதிமுக - தேமுதிக கூட்டணி முதற்கட்ட பேச்சுவார்த்தை - எஸ்.பி.வேலுமணி முக்கிய தகவல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 1, 2024, 7:39 PM IST

AIADMK and DMDK party alliance: சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இல்லத்தில், அதிமுக நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சந்தித்து கூட்டணி குறித்து முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.

parliament-election-alliance-preliminary-talks-have-been-held-between-aiadmk-and-dmdk-parties-in-chennai
அதிமுக - தேமுதிக கூட்டணி குறித்து முதற்கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றது..

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அதிமுக தனது கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்த தொடங்கியுள்ளது. அந்த வகையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை, சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் கூட்டணி தொடர்பாக சந்தித்துப் பேசினர்.

இந்த பேச்சுவார்த்தையில் கே.பி.முனுசாமி, தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக மூத்த நிர்வாகிகள், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உடன் சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், தேமுதிகவிற்கு சாதகமான தொகுதிகள் எனத் தேர்வு செய்துள்ள 7 தொகுதிகளில், 3 தொகுதிகள் வரை ஒதுக்க தயாராக இருப்பதாகவும், அதிமுக தரப்பில் தேமுதிகவிடம் வலியுறுத்தல் எனவும், மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பதிலாக, கூடுதலாக 1 நாடாளுமன்றத் தொகுதி கூட ஒதுக்கீடு செய்வதாக தேமுதிகவுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை, விருதுநகர், கள்ளக்குறிச்சி என சாதகமான தொகுதிகளை பட்டியலிட்ட தேமுதிகவுக்கு, மதுரையை வழங்குவது கடினம் எனவும், கள்ளக்குறிச்சி மற்றும் விருதுநகர் தொகுதியை ஒதுக்கத் தயாராக இருப்பதாகவும் அதிமுக தரப்பில் கூறியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவுடனான சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி.வேலுமணி கூறும் போது, நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிமுக தரப்பிலும், தேமுதிக தரப்பிலும் குழுக்கள் அமைக்கப்படும் எனவும், இன்றைய சந்திப்பு என்பது மரியாதை நிமித்தமான சந்திப்புதானவும் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:"பாஜக தலைமையுடன் தொடர்ந்து பேசி வருகிறோம்.."- கூட்டணி குறித்து ஓபிஎஸ் கூறியது என்ன?

ABOUT THE AUTHOR

...view details