தமிழ்நாடு

tamil nadu

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கு ரத்து!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 24, 2024, 3:37 PM IST

C.V.Shanmugam:தமிழக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்துக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MHC Quashed Defamation suits against Ex minister CV Shanmugam
சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: ஊழியர்களுக்கு 12 மணி நேர வேலை நேரம் குறித்த தமிழக அரசின் சட்டத்திருத்தம், வெளி மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறியது, கஞ்சா புழக்கம், மதுபான விற்பனை ஆகியவை தொடர்பாக நடந்த போராட்டங்கள் தொடர்பாக தமிழக அரசையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் விமர்சித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியிருந்தார்.

இந்த விவகாரங்கள் மூலம் அரசு மற்றும் முதலமைச்சரின் நற்பெயருக்கும் களங்கம் விளைவித்ததாக கூறி சி.வி.சண்முகத்திற்கு எதிராக 4 அவதூறு வழக்குகளை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்திருந்தது. இவற்றை ரத்து செய்யக் கோரி சி.வி.சண்முகம் தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, சி.வி.சண்முகம் தரப்பில், தமிழக முதலமைச்சரை தாக்கியோ? நேரடியாகவோ? தான் பேசவில்லை என்றும், தமிழக அரசை மட்டுமே விமர்சித்ததாகவும், தங்கள் போராட்டத்திற்கு பிறகு 12 மணி நேர வேலை அறிவிப்பை அரசு திரும்பப் பெற்றுள்ளது. அதனால், தங்கள் கருத்து எப்படி அவதூறாக கருத முடியும்.

அவதூறு வழக்கு தொடர்வதற்கான அரசாணையை பிறப்பிக்கும்போது அரசு அதிகாரிகள் மனதை செலுத்தி விசயத்தை ஆராயாமல், இயந்திரத்தனமாக அவதூறு வழக்குகளை தாக்கல் செய்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டது. அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், கஞ்சா அரசு, டாஸ்மாக் அரசு, தாலியை பிடித்து இழுக்கும் அரசு, கஞ்சா முதலமைச்சர், மாணவிகள் கூட்டு பலாத்காரம் தான் தமிழகத்தில் நடக்கிறது என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியுள்ளதால், அரசின் மீதும் முதலமைச்சர் மீதும் நேரடி தாக்குதல் நடத்தி உள்ள நிலையில், அவதூறு வழக்கு தொடர முடியும் என குறிப்பிடப்பட்டது.

அப்போது நீதிபதி, அரசை விமர்சித்த அதேவேளையில், முதலமைச்சர் பெயரையும் குறிப்பிட்டு விமர்சித்துள்ளதாகத் தானே அவதூறு வழக்கு ஆவணங்களில் உள்ளது என சி.வி.சண்முகம் தரப்பிற்கு கேள்வி எழுப்பினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜனவரி 18ஆம் தேதி வழக்குகளின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தமிழக அரசு தொடர்ந்த இரண்டு அவதூறு வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், முதலமைச்சர் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடத்தவும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: புதிய தலைமைச் செயலக கட்டடம் தொடர்பான வழக்கு; உயர் நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் தரப்பில் கடும் ஆட்சேபனை தெரிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details