தமிழ்நாடு

tamil nadu

'இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்'.. திமுக விளம்பரம் தடை விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடிய திமுக! - Dmk Advertisement Issue

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 13, 2024, 12:50 PM IST

Updated : Apr 13, 2024, 1:44 PM IST

Dmk Advertisement Issue
திமுக தேர்தல் விளம்பரம்

DMK Advertisement Issue: "இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்" என்ற விளம்பரத்துக்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் ஏப்ரல் 15ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் தமிழ்நாட்டில் சூடுபிடித்துள்ள நிலையில், திமுகவின் குறிப்பிட்ட ஒரு தேர்தல் விளம்பரத்திற்கு விதிக்கப்பட்டு இருந்த தடை உத்தரவிற்கு எதிராக திமுக தரப்பில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திமுக சார்பில் "இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்" என்ற விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், "நாடு முழுவதும் 18வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திமுக சார்பில் "இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்" என்ற விளம்பரங்களுக்கு முன் அனுமதி பெறுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடன் கடிதம் அனுப்பப்பட்டது.

திமுகவின் தேர்தல் விளம்பரம் விதிமுறைகளுக்கு எதிராக இருப்பதாகக் கூறி, ஏப்ரல் 4ஆம் தேதி அனுமதி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மார்ச் 2023 புதிய விதிமுறைகளின் படி மாநில சரிபார்ப்பு குழு அனுமதி வழங்க வேண்டும்.

அனுமதி மறுக்கப்படுவதாக இருந்தால், அந்த விளம்பரங்கள் இரு தரப்பினரிடையே மோதலை ஏற்படுத்துவது, சமூகம் தொடர்பானதாக இருந்தால் அனுமதி மறுக்கலாம். ஆனால், தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்காமல் அனுமதி மறுத்துள்ளது. அதனால், தேர்தல் ஆணையத்தின் அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்து விளம்பரத்தை வெளியிட அனுமதி வழங்க வேண்டும்" என அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபூர்வாலா, நீதிபதி சத்யநாராயண பிரசாத் அமர்வில் ஏப்ரல் 15ஆம் தேதி திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.

இதையும் படிங்க: 'ஊழல் யூனிவர்சிட்டிக்கு வேந்தர் மோடி; எடப்பாடி சிம்பிளி வேஸ்ட்' - மு.க.ஸ்டாலின் விளாசல் - Lok Sabha Election 2024

Last Updated :Apr 13, 2024, 1:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details