தமிழ்நாடு

tamil nadu

பள்ளி ஆட்டோ கவிழ்ந்து 5ம் வகுப்பு மாணவன் பலி... நெல்லையில் சோகம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 14, 2024, 11:28 AM IST

Updated : Feb 14, 2024, 11:57 AM IST

Tirunelveli accident: நெல்லையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ கவிழ்ந்ததில், 5ஆம் வகுப்பு பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

a 5th std schoolboy died after a school auto overturned in Tirunelveli
பள்ளி ஆட்டோ கவிழ்ந்து 5ம் வகுப்பு மாணவன் பலி

Nellai School boy Dead

திருநெல்வேலி: அம்பாசமுத்திரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு அதன் சுற்றுவட்டார பகுதியான அடைய கருங்குளம், சிவந்திபுரம், விக்கிரமசிங்கபுரம் ஆகிய பகுதியில் இருந்து மாணவர்களை விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுந்தர் என்பவர் தன் ஆட்டோவில் ஏற்றிச் செல்வது வழக்கம். இந்த நிலையில், சுமார் 11 பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு அம்பையில் உள்ள தனியார் பள்ளிக்கு ஆட்டோ சென்று கொண்டு இருந்தது.

அப்பொழுது திடீரென ஆட்டோ ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ கவிழ்ந்ததாக தெரிகிறது. அதனையடுத்து ஆட்டோ கவிழ்ந்ததில், ஆட்டோவின் உள்ளே இருந்த 11 குழந்தைகளும் அலறியடித்து கத்தியுள்ளனர். அதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக வந்து குழந்தைகள் அனைவரையும் ஆட்டோவில் இருந்து மீட்டுள்ளனர்.

ஆனால், ஆட்டோ கவிழ்ந்ததில் விக்கிரமசிங்கபுரம் பகுதியை சேர்ந்த சித்திரைநாதன் என்பவருடைய மகன் பிரதீஷ் என்ற மாணவன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனிடையே காயமடைந்த மற்ற மாணவ மாணவிகளை அருகில் இருந்தோர் உடனடியாக மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக விரைந்து அழைத்துச் சென்றனர்.

மேலும் அந்த விபத்தில் 3 மாணவ மாணவியருக்கு அதிகமான காயம் இருப்பதால் அவர்கள் தற்பொழுது நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இருப்பதாக அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆட்டோ விபத்தில் சிக்கிய 11 பேரில், எட்டு பேர் காயமடைந்த நிலையில் ஒரு மாணவர் உயிரிழந்தது சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: வீட்டினுள் மின் கம்பம்..! மின்வாரிய ஊழியர்கள் அலட்சியமா? உதவி கோரும் மாற்றுத்திறனாளி மூதாட்டி!

Last Updated : Feb 14, 2024, 11:57 AM IST

ABOUT THE AUTHOR

...view details