ETV Bharat / state

வீட்டினுள் மின் கம்பம்..! மின்வாரிய ஊழியர்கள் அலட்சியமா? உதவி கோரும் மாற்றுத்திறனாளி மூதாட்டி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 14, 2024, 9:59 AM IST

Updated : Feb 14, 2024, 1:08 PM IST

EB Post found inside the House: சாத்தான்குளம் அருகே மாற்றுத்திறனாளி மூதாட்டி வீட்டினுள் துணை மின் கம்பம் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மின் கம்பத்தை எடுப்பது குறித்து நடவடிக்கை எடுக்க மூதாட்டி கோரிக்கை விடுத்து உள்ளார்.

Etv Bharat
Etv Bharat

EB Post found inside the House

தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே உள்ள புத்தன்தருவை அடுத்த பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் பொன்னம்மாள் என்கிற மூதாட்டி. மாற்றுத்திறனாளியான இவர் குடிசை விட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், இவருக்கு மத்திய அரசு சார்பில் இலவச வீடு வழங்கப்பட்டுள்ளது.

தங்களின் புதிய வீட்டிற்காக மின் இணைப்பு வேண்டி சாத்தான்குளம் அடுத்த நடுவக்குறிச்சி பகுதியில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இந்த நிலையில், மின் வாரிய அலுவலர்கள் மின் இணைப்பு வழங்க மின்கம்பங்கள் அமைத்து, மின் கம்பிகள் இழுக்க வேண்டும் எனக் கூறி, அதற்கு 58 ஆயிரத்து 500 ரூபாய் பணம் கட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

அதற்காக தான் வைத்திருந்த நகைகளை விற்று மின்வாரியம் கோரிய பணத்தை கட்டியதாக பொன்னம்மாள் தரப்பில் கூறப்படுகிறது. அதனை அடுத்து, மூன்று மாதங்களுக்கு முன்னர் மூதாட்டி பொன்னம்மாள் வீடு கட்ட தேர்வு செய்துள்ள இடத்தின் அருகே மின் கம்பத்தையும், அது சாயாமல் இருப்பதற்காக துணை கம்பத்தையும் மின் வாரிய அதிகாரிகள் நட்டுள்ளனர். ஆனால், அந்த துணை கம்பம் பொன்னம்மாளின் வீடு கட்ட தேர்வு செய்த இடத்திற்குள் நடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: திருடிய பதக்கத்தை திருப்பிக் கொடுத்த திருடன்.. இயக்குநர் மணிகண்டன் வீட்டு கொள்ளைச் சம்பவத்தில் திருப்பம்!

இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த பொன்னம்மாள், இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். ஆனால் மின்வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், மின் கம்பிகள் அனைத்தும் வீட்டின் மேற்பகுதியில் செல்வதாக பொன்னம்மாள் அச்சம் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், வேறு வழியின்றி தனது வீடு கட்டும் பணியை தொடங்கிய பொன்னம்மாள், தற்போது அதன் பணிகள் முழுமை அடைந்துள்ளன. மின்வாரிய ஊழியர்கள் நட்ட துணை கம்பம் பொன்னம்மாள் வீட்டின் சமையலறயின் உட்பகுதியில் இருப்பது தெரியவருகிறது. இதனால் மூதாட்டி பொன்னம்மாள் செய்வதறியாது இருப்பதாக கூறினார்.

இந்நிலையில், மத்திய அரசின் உதவியில் மாற்றுத்திறனாளி மூதாட்டி ஒருவர் கட்டியுள்ள வீட்டின் உட்பகுதியில், துணை மின்கம்பம் உள்ளது குறித்து பல முறை புகார் அளித்தும் மின்வாரிய அதிகாரிகள் கண்டும் காணாமல் அலட்சியம் காட்டி வருவதாக பொன்னம்மாளின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், வீட்டிற்கு உட்பகுதியில் மின்சார துணை கம்பம் இருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

இதையும் படிங்க: நெல்லையில் இளம் வயதில் கர்ப்பமாகும் பெண்களின் எண்ணிக்கை உயர்வு; தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அதிர்ச்சி தகவல்..!

Last Updated : Feb 14, 2024, 1:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.