தமிழ்நாடு

tamil nadu

இஸ்ரேலின் அண்மை தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் உட்பட 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்! - Israel Palestine war

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 21, 2024, 3:15 PM IST

War on West Bank: இஸ்ரேல் ராணுவம் மற்றும் உட்பாதுகாப்பு நிறுவனமான ஷின் பெட் (Shin Bet) மற்றும் இஸ்ரேலிய காவல் துறையினர் பாலஸ்தீன முகாம்களில் மேற்கொண்ட நடவடிக்கையில் சில பாலஸ்தீனிர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் வானொலி தெரிவித்துள்ளது.

Israel War on west Bank
Israel War on west Bank

ரமலா (பாலஸ்தீன்):பாலஸ்தீனத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள துல்கரம் நகர் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்டு வரும் சோதனை மற்றும் தாக்குதலில் 14 பாலஸ்தீனியர்கள் இறந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இது குறித்து சீன செய்தி நிறுவனமான சின்ஹுவா (Xinhua) செய்தி அறிக்கை வெளியிட்டிருந்தது.

அதில், "நகரின் கிழக்கு பகுதியில் உள்ள நூர் ஷம்ஸ் பாலஸ்தீனியர்களின் முகாமில் 14 பாலஸ்தீனியர்கள் மரணமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, துல்கர்ம் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளது. மேலும் கூடுதல் தகவல் எதுவும் தரவில்லை சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இஸ்ரேலிய ராணுவப் படையினர் கடந்த வியாழக்கிழமை அன்று பாலஸ்தீனியர்கள் முகாமிட்டிருந்த பகுதியில் கனரக வாகனத்தில் நுழைந்து அப்பகுதியை சூறையாடியதாகவும், அப்பகுதியில் இருந்த வீடுகள், கடைகள் உள்ளிட்டவற்றை இடித்ததாகவும் பாலஸ்தீனிய பாதுகாப்பு தரப்பில் கூறப்பட்டது.

இதையும் படிங்க:ஐக்கிய அரபு அமீரகத்தில் வரலாறு காணாத கனமழை பெருவெள்ளம்! ஓமனில் 18 பேர் பலி! திகைத்துப் போன வளைகுடா நாடுகள்!

இந்நிலையில், இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பினரான அல்-குத்ஸ் (Al-Quds) படையினர் மற்றும் பாலஸ்தீன தேசிய விடுதலை இயக்கத்தின் ஆயுதம் படையினர் இஸ்ரேலிய ராணுவத்திற்கு எதிராக கடும் தாக்குதலில் ஈடுபட்டதாக தனித்தனி அறிக்கையில் தெரிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேலிய ராணுவம் மற்றும் துப்பாக்கி ஏந்திய பாலஸ்தீனப் படையினருக்கு இடையே தாக்குதல் நடந்ததாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், பாலஸ்தீன முகாம்களில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கையின் போது, இஸ்ரேலின் ராணுவம் மற்றும் உட் பாதுகாப்பு நிறுவனமான ஷின் பெட் (Shin Bet) மற்றும் இஸ்ரேலிய காவல் துறையினர் சில பாலஸ்தீனியர்களைக் கொன்றதாக இஸ்ரேல் பொது வானொலி தெரிவித்துள்ளது.

மேலும், இந்த தாக்குதலில் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் துல்கர்ம் படையின் தளபதி அபு சுஜா என்று அழைக்கப்படும் முகமது ஜாபர் மற்றும் செயற்பாட்டாளரான அகமது அல்-ஆரிஃப் உள்ளிட்டவர்களும் கொல்லப்பட்டதாகவும், தேடப்பட்டு வந்த 8 பேரும், வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டதாகவும் இஸ்ரேல் வானொலி தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி, இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடந்த தாக்குதல் சமயத்தில் இருந்த பாலஸ்தீனத்தின் மேற்கு கரைகளில் பதற்றமான சூழல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இஸ்ரேல் காசா மீது நடத்தி வந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வந்த ஈரான், தற்போது இஸ்ரேல் தாம்ஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகம் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க:இஸ்ரேல் - ஈரான் போர்.. பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள்? இந்தியா யார் பக்கம்?

ABOUT THE AUTHOR

...view details